பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20լ பாலபாரத சங்கத்தின்சார்பில் கூட்டங்கள் கூட்டினர்: தேசியச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்தார்: "இந்தியா’ பத்திரிகை மூலம் பிரசாரமும் செய்தார். அவர் செய்த பிரச்சாரத்தை இப்போது காண்போம். "இந்தியாவிலே பிறந்து, இந்தியாவிலே வளர்ந்து, இந்த நாட்டின் rேமலாபங்களையே தமது rேமலாபங் களாக உடைய எல்லா வகுப்பினரும் ஒரே ஜாதியென்று. அந்த ஜாதி முழுமையும் உன்னதம் பெறுவதற்குரிய வழிகளை அனுசரிக்க வேண்டுமென்ற ஞானமே, "இந்திய ஜாதிய ஞானம் என்று கூறப்படும். "இந்தியா பல பல பாஷைகளையும், மதங்களையும் இன்பங்களையும் உடைய நாடு. ஆதலால், இங்கே ஜாதீய ஞானம் ஏற்படுவது இயற்கை விரோதமென்று சிலர் கூறுகிருர்கள். இதனை நாம் எத்தனையோ முறை கண்டனம் செய்து எழுதியிருக்கிருேம். சென்ற புதன் கிழமை மாலை சென்னை பால பாரத சங்கத்தின் ஆதரவின் கீழ் கேம்பிரிட்ஜ் பட்டதாரியாகிய ரீ. சி. ராமலிங்க ரெட்டி செய்த திறமை மிகுந்த உபந்நியாசத்திலே நமது நோக்கத்தைத் தழுவிப் பேசியது பற்றிச் சந்தோஷமடை கின்ருேம். ஜாதீய ஞானம் ஏற்படுவதற்கு பாஷைகள், மதங்கள் இவை சிறிதேனும் தடையாக மாட்டா என்பதை பூரீ ராமலிங்க ரெட்டி நன்கு வற்புறுத்திப் பேசினர். "அமெரிக்காவிலே எத்தனையோ பின்னல் கொண்ட மதஸ்தர்கள் சேர்ந்து ஏக ஜாதீய உணர்ச்சி கொண் டிருக்க வில்லையா? சீனவிலே பாக்ஸார் கலகம் நடந்த போது ப வுத் த ரீ க ள், மகமதியர்கள், கன்பூவியஸ் மார்க்கஸ்தர் முதலிய எல்லோரும் ஒன்றுசேர்ந்து கொண்டு வெள்ளை நிறத்தவரை எதிர்க்கவில்லையா? ஜப்பானில் கிறிஸ்தவர்கள், பவுத் தர்கள், என்ற