பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 எல்லோரும் ஒருங்கு சேர்ந்து ருஷ்ய கிறிஸ்தவர்களை நாசம் செய்ய வில்லையா? 'ஆதலால் மதவேற்றுமைகளும், குலவேற்றுமைகளும் இந்தியாவிலே ஜாதிய ஞா ைம் பிரபலமடைந்து ஸ்வராஜ்யம் ஏற்படுதற்குச் சிறிதேனும் தடையாகமாட்டா. எந்தக் குலமாய் இருந்தாலும், எந்த மதமாய் இருந் தாலும் இந்தியர்கள் எல்லோரும் ஒரு ஜாதிதான். இந்த ஜாதீய உறுதியை அந்நியர் எவ்வளவு அசைக்க முயன்ருலும் இது சிறிதேனும் அசைவுபெற மாட்டாது. (இந்தியா - மார்ச் 16 - 1907) இப்பொழுது பார தி யி ன் பாடல் ஒன்றை கவனிப்போம். ஜாதி மதங்களைப் பாரோம் -உயர் ஜன்ம மித்தேசத்தில் எய்தினராயின் வேதிய ராயினும் ஒன்றே -அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே. ஈனப் பறையர்களேனும் -அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவரன்ருே? சீனத்தராய் விடுவாரோ? பிற தேசத்தார் போற்பல தீங்கிழைப்பாரோ? இந்தியாவின் விரோதிகளுக்கு எத்தகைய பதிலடி கொடுக்கிருர் பாரதியார்? முன்னேயுள்ள கட்டுரையைப் படித்து விட்டு இந்தப் பாடலையும் படித்தால்தான் அதன் உண்மை வேகம் நமக்குப் புலப்படும். இவ்வளவில் நின்ருரா பாரதியார்? இல்லை. இன்னும் ஒரு படிமேலே ஏறித் தாக்குகிரு.ர். Nationalism – zgrĝu sipas.