பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£205 பிரதிநிதிகளுக்கு அடி. மகாநாட்டுத் தொண்டர்களுக்கு அடி. மக்கள் கொதித்து எழுந்தார்கள். 'வந்தே மாதரம்’ என்று முழங்கினர்கள். மாஜிஸ்டிரேட் என்ன செய்தான்? எவருமே வந்தே மாதர கோஷம் போடக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தான். மாணவர்கள் என்ன செய்தார்கள்? கூட்டமாக நின்று வந்தே மாதரம்' என்று கோஷம் போட்டார்கள். மாணவர்கள் இந்த மாதிரி அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபடக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தான் மாஜிஸ்ட்ரேட். மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவு கண்டு மாணவர்கள் அடங்கினர்களா? இல்லை. கூட்டங்கள் கூட்டினர்கள்: சொற்பொழிவு நிகழ்த்தினர்கள்: 'வந்தே மாதரம் என்று கோஷமிட்டார்கள். மாஜிஸ்ட்ரேட் என்ன செய்தான்? தன் உத்திரவுக்கு அடங்கி நடக்காத மாணவர்களைப் பள்ளிக் கூடங்களி லிருந்து விலக்கி விடுமாறு பள்ளி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தான். மாணவர்கள் என்ன செய்தார்கள்? "மாஜிஸ்ட்ரேட் உத்தரவுப்படி நடக்கும் பள்ளிகளில் நாங்கள் படிக்க மாட்டோம்' என்ருர்கள்: பள்ளிக் கூடங்களை பகிஷ்கரித் தாரிகள். பாரிசாலில் நடைபெற்ற இந்தக் கிளர்ச்சியின் எதிரொலி வங்கம் முழுவதும் கேட்டது: வங்கம் மட்டுமா? இந்திய நாடு எங்குமே கேட்டது. வங்கத்தில் நடைபெற்ற சர்வாதிகாரத்துக்குஅடக்குமுறைக்கு-பாரதியாரின் கவிதா பீரங்கி எதிர் முழக்கம் செய்கிறது.