பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 "கிழக்கு வங்க கவர்னரே! புல்லரே! உன் கைவரிசையைக் காட்டு!" வந்தே மாதரம் என்போம் "ஆம்! அப்படித்தான் சொல்வோம். இந்திய மக்கள் எல்லாரும் ஒரே குரலில் சொல்வோம். உனது அடக்கு முறை கண்டு அஞ்சோம்." என்ற பொருள் அதிலே தொனிக்கிறது. 'வந்தே மாதரம் என்பதன் பொருளையும் உடனே சொல்கிரு.ர். 'வந்தே மாதரம் என்ருல் எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்று பொருள் என்கிருர் பாரதியார். இந்த அரசியல் சரித்திரப் பின்னணியை மனத்தில் கொண்டு பார்த்தால்தான். 'வந்தே மாதரம் பாடலில் உள்ள வேகத்தையும், எதிர் முழக்கத்தையும் நன்கு உணரலாம். ஆயிரம் உண்டிங்கு ஜாதி -எனில் அங்கியர் வந்து புகல் என்ன நீதி? என்ற அடிகளைப் பாரதியார் திருப்பித்திருப்பிச் சொல் வாராம். அந்நியர், அந்நியர் என்று பல முறை அழுத்திச் சொல்வாராம். என்ன நீதி? என்ற சொற்களை ஒவ்வொரு புறமும் நின்று பாய்ந்து பாய்ந்து கேட்பாராம். அப்படிக் கேட்கும் போது வேகம்-எழுச்சி-தோன்றும். கிங்ஸ் போர்டு என்பவர் ஓர் ஆ ங் கி லே ய ர். வங்காளத்திலே முஸ்பரிபூரிலே ஜில்லா நீதிபதியாக இருந்தார்; சுதேசி இயக்கத்திலே ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை விதித்துக் கொண்டிருந்தார். இது கண்டு மனம் கொதித்தார்கள் வங்க இளைஞர்கள். "பழிக்குப் பழி வாங்கு என்றது அவர்தம் உள்ளம். கிங்ஸ் போர்டு மீது வஞ்சம் தீர்க்க உறுதி கொண்டார்கள்.