பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207 குதிராம்போஸ் என்பவர் ஒர் இளைஞர். பதினெட்டே வயது நிரம்பப் பெற்றவர். பால் வடியும் முகம். தீப்பொறி கக்கும் கண்கள். கட்டு மஸ்தான உடல். உறுதி கொண்ட நெஞ்சு. இந்த இளைஞர் முன்வந்தார். எதற்கு? கிங்ஸ் போர்டு என்ற அந்த அக்கிரம நீதிபதி மீது வஞ்சம் தீர்க்க. ஆயிரத்துத் தொளாயிரத்து எட்டாம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முப்பதாந்தேதி, சூரியன் மலை வாயில் விழுந்து விட்டான். இரவு கவ்வியது. கிங்ஸ்போர்டு வசித்த பங்களாவுக்கு அருகில் சென்று கொண்டிருந்தார் அந்த இளைஞர். கையிலே வெடிகுண்டு. ஒரு புதரிலே மறைந்து நின்ருர்: கிங்ஸ் போர்டின் வருகையை எதிர் நோக்கி நின்ருர். அந்தக் காலத்திலே குதிரை பூட்டிய கோசி வண்டியில் தான் வெள்ளையர்கள் செல்வார்கள். கிங்ஸ் போர்டு கோச் வண்டியில் வருவான். அவனை யமனிடம் சேர்க்க வேண்டும் என்று உறுதி பூண்டு நிற்கிருர் குதிராம்போஸ். வழிமேல் வழிவைத்து நிற்கிரு.ர். கோச் வண்டியும் வேகமாக வந்தது. வெடிகுண்டை வீசினர் குதிராம் போஸ். அவ்வளவுதான்! இரண்டு பெண்களின் ஒலம் கேட்டது கோச்சின் உள்ளிருந்தவர் கிங்ஸ் போtடு அல்லர். ஆங்கிலப் பெண்மணிமார் இருவர். பெயர் கென்னடி என்பது. கிங்ஸ் போர்டு பங்களாவுக்கு வந்த பெண்கள் அவர் கள். கிங்ஸ் போர்டின் நண்பரான கென்னடி என்ற ஆங்கிலேயர் ஒருவரின் மனைவியும் மகளும் ஆவர்.