பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£98 குதிராம் போசின் குறி தப்பியது. பிறகு கேட்க வேண்டுமா? போலீஸ் வந்தது: வேட்டையாடியது: குதிராம்போசைக் கைது செய்தது: வழக்குத் தொடுத்தது. குதிராம்போஸ் தூக்கிலிடப் பட்டார். இந்த வழக்கு வங்காளத்தையே ஒரு குலுக்குக் குலுக்கி விட்டது. குதிராம்போசின் படம் வங்காளிகளின் வீடுகளை அலங்கரித்தது. வங்க வாலிபர் எல்லாருடைய நெஞ்சிலும் நீங்காது குடிபுகுந்தார் குதிராம்போஸ், "யுகாந்தர் என்பது ஒரு பத்திரிகை. தீவிர அரசியல் பத்திரிகை. அதன் ஆசிரியர், பூபேந்திர நாத தத்தர் என்பவர். இவர் சுவாமி விவேகானந்தரின் இளவல். வயதில் இளைஞரே. இவர் என்ன செய்தார்? குதிராம் போசின் தியாகத்தைப் பாராட்டித் தமது பத்திரிகையிலே எழுதினர். தொடர்ந்து பல கட்டுரைகள் வரைந்தார். அரசாங்கம் சும்மா இருக்குமா? பூபேந்திரர் மீது வழக்குத் கொடுத்தது. பூபேந்திரர் சிறையில் தள்ளப் பட்டார். பூபேந்திரரின் தாய் இச் செய்தி கேட்டார். பாரத தேவியின் திருப்பணியிலே தமது மகன் சிறை சென்றது கேட்டார்; மகிழ்ந்தார். அம்மட்டோ! வங்க மாதர் 500 பேர் பூபேந்திரனின் தாய் இருந்த விட்டுக்கு ஊர்வலமாகச் சென்ருர்கள். பூபேந்திரனையும், அவரை ஈன்ற தாயையும் பாராட்டினர் கள், இந்த அரசியல் பின்னணியை உளத்தில் கொண்டு பாரதி பாடல் ஒன்றைப் பார்ப்போம். History of the Congress by Pattabi Sitaramayya