பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 என்பது செல்லப்பெயர். சுப்பையா எனவே எல்லாரும் அழைத்து வந்தனர். கப்பையாவுக்கு வயது ஐந்து ஆயிற்று. தாய் லக்ஷ்மி அம்மாள் இவ்வுலகு நீத்தாள். "என்னையின்று எனக்கு ஐந்து பிராயத்தில் ஏங்க விட்டு விண் எய்திய தாய்' என்று பாரதியார் தமது சுயசரிதையில் குறிப்பிடுகிரு.ர். தமது மகன் சுப்பிரமணியனின் படிப்பிலே அதிக கவனம் செலுத்தினர் பாரதியின் தந்தை. அந்த அளவு உடற்பயிற்சியிலே கருத்துச் செலுத்தவில்லை. எவருடனும் சேரல் கூடாது. தெருவிலே திரிதல் கூடாது. மற்றப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடல் கூடாது. குளம் குட்டைகளிலே நீந்தி விளையாடல் கூடாது. புத்தகம், படிப்பு, கணக்கு இவைதவிர வேறு எதிலும் கவனம் செலுத்தக்கூடாது. இது அவரது தந்தையாரின் கட்டளை. தந்தையோ கண்டிப்பானவர். சிறு வயதுச் சுப்பையா என்ன செய்வான்? தோழர் எவருமின்றித் தனியணுய் ஏங்கினன், பத்து வயதுச் சிறுவர்கள் எப்படியிருப்பார்கள்? சாக்கு மூட்டை போல் வீட்டில் உட்கார்ந்திருப்பார்களா? உட்கார்ந்திருக்க மாட்டார்கள். தம்மையொத்த பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டு ஓடுவார்கள்; ஆடுவார்கள்; தெருவிலே விளையாடு வார்கள்; மரங்கள்மீது ஏறுவார்கள்; இறங்குவார்கள்: ஆறு குளம் குட்டைகளிலே நீந்துவார்கள். ஆனல் பாவம் கப்பையா! எவருடனும் கலக்க முடியாமல் கலங்குவான்.