பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 இருக்க, இப்போது ஆடத் தொடங்கி விட்டது........ சுயாதீனத்தின் பொரு ட் டு ம் , கொடுங்கோன்மை நாசத்தின் பொருட்டும் நமது ருஷ்யத் தோழர்கள் செய்து வரும் உத்தமமான முயற்சிகள் மீது ஈசன் பேரருள் செலுத்துவானக." (இந்தியா-1-9-1906) ஆயிரத்துத் தொளாயிரத்துப் பதினேழாம் ஆண்டு, ருஷ்யாவிலே மாபெரும் புரட்சி தோன்றியது. ஜார் வீழ்ந்தான்; மக்கள் புரட்சி வெற்றி கண்டது. அப்போது பாரதியார் பத்திரிகை எதுவும் நடத்தவில்லை. எனினும், ருஷ்யப் புரட்சி கண்டு அவர் மகிழ்ந்தார். கொடுங்கோலன் ஜார்மீது ஆத்திரம் கொண்டார். ஆத்திரம் பாடலாகப் பரிணமித்தது. புரட்சிக்காரர் மீது தோழமை, அன்பு கொண்டார். அது தோழமை வாழ்த்தாக மலர்ந்தது. மாகாளி பராசக்தி உருசிய காட் டினிற் கடைக்கண் வைத்தாள் ஆங்கே ஆகாவென்றெழுந்தது பார் யுகப்புரட்சி கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான் இந்தப் பாடல் பிறந்தது. இதிலே எத்தகைய உற்சாகம் எத்தகைய மகிழ்ச்சி ஜார் ஆட்சியின் கொடுமைமீது அவருக்கு ஏற்பட்ட சினம், அடுத்த சில அடிகளிலே பொங்குதல் காணலாம். இத்தகைய முடிவை 1906-ம் ஆண்டிலேயே முன்ன தாக உணர்ந்தார்: அறிந்தார். தமது கருத்துப்படியே புரட்சி சேனை வெற்றி கண்டது கேட்டு, மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்துப் பாடுகிருர் பாரதியார். ருஷிய மக்களின் விடுதலையிலேயே ஆசிய மக்களின் விடுதலையைக் கண்டார் பாரதியார். ஆசிய நாடுகள் @ಾಗಿ