பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. "ஆண்டு ஓர் பத்தினில் ஆடியும் ஓடியும் ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும் ஈண்டு பன்மரத்தேறி இறங்கியும் என்ளுெடொத்த சிறியர் இருப்பரால் வேண்டு தந்தை விதிப்பினுக்கு அஞ்சி யான் வீதியாட்டங்கள் ஏதினும் கூடிலேன் தூண்டு நூல் கணத்தோடு தனியணுய் தோழமை பிறிதின்றி வருந்தினேன். - பாரதி சுய சரிதை பிள்ளையாண்டான் கணக்கிலே குரப்புலியாக விளங்க வேண்டும் என்று விரும்பினர் தந்தை. ஆளுல் சிறுவன் சுப்பையாவின் கருத்தோ வேறு வகையில் சென்றது. சிறுவன் கப்பையா இயற்கை வனப்பிலே ஈடு பட்டான். கவிதையிலே மூழ்கித் திளைத்தான். எட்டயபுரத்திலே ஒரு பள்ளிக்கூடம். அதன் பெயர் ஏ.வி.ஸ்கூல் என்பது. இது ஆங்கிலோ வெர்னுகுலர் ஸ்கூல் என்பதன் வாமனுவதாரம். இந்தப் பள்ளிக் கூடத்திலே தான் கப்பையா படித்தான். அந்தப் பள்ளிக் கூடத்தின் தலைமை ஆசிரியராக விளங்கியவர் சங்கர ஐயர் என்பவர். அந்தக் காலத்திலே பிரைமரி போர்டு என்ற ஒன்று இருந்தது. ரெவரண்டு ஏ. கானன் மெகாசியஸ் என்பவர் அந்த போர்டின் தலைவராக இருந்தார். ஆரம்பப் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் எந்த அளவு ஆங்கிலம் கற்றிருக்கிருர்கள் என்று சோதனை செய்து நற்சான்று வழங்குவதுதான் அந்த பிரைமரி போர்டின் வேலை. இந்த வேலையைச் செய்தவர் ரெவரண்டு கானன் மெகாசியஸ் என்ற பாதிரியார். இவர் நாசரெத் என்ற ஊரிலே இருந் தார்.

  • கூறியவர்-எட்டயபுரம் குருகுகதாசப்பிள்ளை.