பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 ஐந்து கல்லால் ஒரு கோட்டை-இந்த ஆனந்தக் கோட்டைக்கு ஒன்பது வாயில் இது தெருவிலே பண்டாரங்கள் பாடிவரும் பாட்டு. இந்தப் பாட்டின் வடிவம் பழையது. இந்தப் பழைய வடிவத்தை எடுத்துக் கொண்டார் பாரதியார். அதிலே புதிய கருத்தைப் புகுத்தினர். இவ்வாறு பழைய வடிவத்திலே புதிய கருத்தை ஏன் புகுத்தினர்? காரணம் என்ன? காரணம் ஒன்றே. அதாவது, இந்தப் புதிய கருத்து சாதாரண மக் க ளி ைட ேய பரவுதல் வேண்டும். சாதாரண மக்களிடையே பழக்கத்தில் இருக்கிறது நொண்டிச் சிந்து, சாதாரண மக்களிடத்திலே பழகிவருவது கும்மி! சாதாரண மக்களிடையே பழக்கத்திலிருப்பது பண்டாரப் பாட்டு. அதாவது தாயுமானவர் ஆனந்தக் களிப்பு எனப்படுவது. எனவே, இந்த சந்தத்தில்-மெட்டில்-வடிவில் பாடினல் பாமர மக்களிடையே புதிய கருத்து எளிதில் பரவும் என்பதே பாரதியின் கருத்து. எனவே, பழைய வடிவில் புதிய கருத்தைப் பாடினர். மகா பாரதக் கதை மிகப் பழைய ஒன்று. எனினும் அதிலே புதிய கருத்தைத் தெரிவிக்க விரும்புகிருர் பாரதி. அக்கருத்து யாது? ஆங்கிலேயர்கள் வாணிபத்தின் பொருட்டுப் பாரத நாட்டுக்கு வந்தார்கள். இந்த நாட்டின் செல்வசி செழிப்பைக் கண்டார்கள். இச் செல்வம் முழுதும் கவர்ந்துகொள்ளத் திட்டமிட்டார்கள். போரி செய்தார் களா? இல்லை. தந்திரத்தால்-சூதால்- இந்த நாட்டுச் செல்வத்தைக் கொள்ளையிட்டார்கள்.