பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$21 இந்த நாட்டு மக்களை அடிமை கொண்டார்கள். இவர்களது நாட்டையும் கவர்ந்து கொண்டார்கள். டாக்கா மஸ்லின் என்ற புகழ் பெற்ற துணிகளை உரிந்து கொண்டார்கள். இவ்வாறு நாடிழந்து, செல்வம் இழந்து, அடிமைப் பட்ட மக்கள் சபதம் செய்கிருர்கள். தம்மை அடிமை கொண்டோரைப் போரிலே வென்று, தங்கள் நாட்டையும் செல்வத்தையும் மீட்கச் சபதம் செய்கிருர்கள். இந்த உட்கருத்தைத்தான் "பாஞ்சாலி சபதம்’ என்ற தலைப்புடன்கூடிய காப்பியத்தின்மூலம் நமக்கு அறிவிக் கிருர் பாரதி. பாரதிக்கு இக்கருத்து எவ்வாறு தோன்றியது? 1907ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ந் தேதி பத்திரிகையிலே பாரதி எழுதுகிருர்: "இந்தியாவை வாள் பலத்தினல் ஜெயித்தோம் என்று "டைம்ஸ் பத்திரிகை எழுதுவது பிரம்மாண்டமான பொய் என்று ஆரம்பத்திலேயே சொன்ளுேம். இது நம்முடைய சொந்த அபிப்பிராயம் மட்டுமன்று, ளிலி என்ற புகழ் பெற்ற ஆங்கிலேய பண்டிதரும் இதே அபிப்பிராயத்தைத் தெரிவித்திருக்கிரு.ர். உள்நாட்டிலே, குழப்பம் கொண் டிருந்த இத்தேசத்தை ஆங்கிலேய வர்த்தகக் கம்பெனியார் இந்தியப் படைகளையும், இந்தியப் பணத்தையும் வைத்துக் கொண்டு, தந்திரத்திலுைம், கபடத்திலுைம் ஜெயித்தார் களென்று மேற்படி, ஆங்கிலேய பண்டிதர் விஸ்தாரமாக நிரூபணம் செய்திருக்கிரு.ர். அவருடைய விவகாரங்களையும் சித்தாந்தத்தையும் மற்ருெருமுறை தமிழில் மொழி பெயர்த்து எழுத உத்தேசித்திருக்கின்ருேம்." இவ்வாறு எழுதினர் பாரதியார்.