பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323 ஸ்ரீ ஜான் ஸிலி என்பவர் பிரிட்டனில் இருந்த பிரிட்டிஷ் வரலாற்று அறிஞர். இங்கிலாந்தின் விரிவு' என்ற தலைப்புடன் ஒரு நூல் வெளியிட்டார் அவர். இந்திய நாடு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியானது எப்படி என்பதை அந்த நூலிலே அவர் விவரித்திருக்கிரு.ர். ஆங்கிலேயர்கள் இந்த இந்திய நாட்டைச் சூதாலும், வஞ்சனையாலும் அடிமை கொண்டது எப்படி என்பதை அந்த நூலிலே விரிவாகக் காணலாம். விடுதலைப் போராட்டத்தின் தலை நாளிலே ளtலி எழுதிய புத்தகம் இந்திய தேசபக்தர்களின் பைபிளாக விளங்கியது. nலி எழுதிய புத்தகத்தைத் தமிழிலே மொழி பெயர்த்து வெளியிட எண்ணினர் பாரதியார். ஆளுல் அக்கால அரசியல் சூழ்நிலை அதற்கு இடம் தரவில்லை. எனவே, இந்திய நாடு வஞ்சனையால், சூதால், அடிமை கொள்ளப்பட்டது என்ற கருத்தைப் பிரசாரம் செய்ய விரும்பினர். சூது மூலமே இந்திய நாட்டின் செல்வத்தை ஆங்கிலேயர்கள் கவர்ந்து செல்கிருர்கள் என்பதையும் பிரச்சாரம் செய்ய விரும்பினர். இவ்வாறு அடிமையான மக்கள் இழந்த சுதந்திரத்தை மீண்டும் பெறச் சபதம் செய்வதையும் பிரச்சாரம் செய்ய விரும்புகிரு.ர். ஆக, இம் மூன்று அடிப்படைக் கருத்துக்களையும் வெளியிடுவதற்கு நல்லதோர் கருவி கிடைத்தது. அதுவே பாரதம். சூதாடல், அடிமை கொள்ளல், அடிமை நீங்கப் பொங்கி எழல். ஆகிய மூன்றையும் வலியுறுத்தும் பகுதியை எடுத்துக் கொண்டார். தாம் சொல்ல விரும்பிய கருத்தைச் சொல்லி விட்டார் பாரதி. அதிலே சபதம்’ என்ற சொல்-பாஞ்சாலி சபதம்என்ற தலைப்பு அரசியலில் இடம் பெற்று விட்டது.