பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 தமிழ் சிறந்தது. தமிழில் இருளப்ப நாயக்கன் காதல், செறுவூர்க் கோவை, பிச்சித்தேவன் உலாமடல் முதலிய காவியங்கள் நிகரற்ற பெருமையுடையன. இவற்றிலுள்ள சுவை உலகத்தில் வேறெதிலுமேயில்லை' என்பது சின்னச் சங்கரனுடைய கொள்கை. சங்கரன் கொஞ்சம் குள்ளளுக இருந்தபடியால் பள்ளிக்கூடத்தில் மற்றப் பிள்ளைகள் அவனுக்குச் சின்னச் சங்கரன்' என்று பெயர் வைத்து விட்டார்கள். தென் பாண்டி நாட்டிலே, பொதிய மலைக்கு வடக்கே இருபது காத தூரத்தில் பூமி தேவிக்குத் திலகம் (வைத்து அது உலர்ந்து போயிருப்பது) போலக் கவுண்டபுரம் என்ற நகரம் நிகழ்ச்சி பெற்றது. அதைத்தான் பாமர ஜனங்கள் கவுண்டனுார் என்பார்கள். இந்நகரத்தில் நமது கதை தொடங்கும் காலத்திலே மகா கீர்த்திமானகிய ராமசாமிக் கவுண்டரவர்கள் அரசு செலுத்தி வந்தனர். வெளியூர் பாமர ஜனங்கள் இவரை ஜமீந்தார்' என்பார்கள். கவுண்டபுரத்திலே இவருக்கு 'மகா ராஜா' என்றும் பட்டம். கவுண்டரின் மூதாதைகளின்மீது பண்டைக் காலத்துப் புலவர்கள் பாடியிருக்கும் 'இன்ப விஸ்தாரம்" முதலிய நூல்களை அவ்வூர்ப் புலவர்களும், அவர்களைப் பின்பற்றி ம்ற்ற ஜனங்களும் வேதம் போலக் கொண்டாடு வார்கள். ராமசாமிக் கவுண்டர் (இவருடைய முழுப்பெயரைப் பட்டங்கள் சகிதமாக பின்பு சொல்லுகிறேன்.) தமிழில் அபிமானமுடையவராதலால் கவிதை பாடத் தெரிந்தவர் களுக்கு அவ்வூரில் மிகுந்த மதிப்புண்டு. சின்னச் சங்கரனுக்குப் பத்து வயது முதலாகவே கவிபாடும் தொழிலில் பழக்கமுண்டாய் விட்டது. எப்போதும் புலவர்களுடனேதான் சகவாஸம். ஒத்த வயதுப் பிள்ளை