பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229 அவர்களுக்கு அளவிறந்த மகிழ்ச்சி புண்டாயிற்றேயல்லாது அவன் பாப்பா என்ற எண்ணம் மாறவில்லை. இரண்டு மூன்று தினங்களுக்கொருமுறை பாட்டி அவனுக்கு "சாந்தி கழிப்பாள். சுண்ணும்புக்கும், மஞ்சளுக்கும் செலவதிகம் - சங்கரனுக்குக் கண்பட்டது கழி யும் பொருட்டாக, தகப்பனர் இவனை "பையன்’ என்று பேசுவார். இவன் முற்றிப்போன விஷயம் அவருக்குத் தெரியாது. இவனு டைய கீர்த்தி புலவர்களுக்குள்ளே பரவி கவுண்டரவர்கள் செவிவரை எட்டிப்போயிற்று, இதிலிருந்து கப்பிரமணிய அய்யருக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் இவன் பள்ளிக் கூடத்துப் பாடங்களை நேரே படிப்பதில்லை என்பதில் கொஞ்சம் வருத்தமுண்டு. இவனைப் பெரிய பரிrைகளில் தேறும்படி செய்து சீமைக்கனுப்பி, ஜில்லா கலெக்டர் வேலைக்குத் தயார் செய்யவேண்டும் என்பது அவருடைய ஆசை. அதற்கு இவன் புலவர்களிடம் சகவாஸம் செய்வது தான் பெரிய தடையென்பது அவருடைய புத்தியில் தட்டவில்லை. இவனுடைய மாமனுகிய கல்யாணசுந்தரம் முதலிய சில துஷ்டப் பையன்களுடன் சேர்ந்து விளையாடிக் கெட்டுப் போகிருனென்றும், தாய் வீட்டார் கொடுக்கும் செல்லத்தால் தீங்குண்டாகிறது என்றும், இவ்விரண்டை யும் கூடியவரை குறைத்துக்கொண்டு வரவேண்டு மென்றும் அவர் தீர்மானஞ் செய்தார். இனி, இவனுடன் ஒத்த வயதுள்ள பிள்ளைகள் ஆரம்பத்திலே சங்கரனை இகழ்ச்சியில் வைத்திருந்தார்கள். பிறகு நாளடைவில் சங்கரன் ஒரு வித்துவான்’ ஆகி விட்டதைக் கண்டவுடனே அந்தப் பிள்ளைகளுக்கெல்லாம் அவனிடம் ஒருவிதமான பயமும் வியப்பும் உண்டாயின. "இவன் நோஞ்சப்பயல்; ஒரு இழவுக்கும் உதவுமாட்டான்