பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 என்று முன்போல வாய் திறந்து சொல்வதில்லை. மனத் திற்குள் அவ்வெண்ணத்தை அடக்கிவிட்டார்கள். பள்ளிக்கூடத்துக்குப் போன சங்கரனை உபாத்திமார் புலவரே, பலகையின் மேலே ஏறி நில்லும், என்பார்கள், பாடங்கள் நேரே சொல்லாதது பற்றி. நமது சின்னப் புலவர் பலகையின் மேலேறி நின்றுக் கொண்டு மனத்துக் குள்ளே எதுகைகளடுக்கிக்கொண்டிருப்பார். உபாத்தி யாயர் கரும்பலகைமேல் கணக்குப் போட்டுக் கொண் டிருப்பார். இவன், "புலவன், அலவன், வலவன் பலகை, அலகை, உலகை, கில், கெல், வில், பல், சொல், அல், எல், கல், மல், வெல், வல்கணக்கு வணக்கு இணக்கு-" என்று தனக்குள்ளே கட்டிக்கொண்டு போவான். வாத்தியார் 00. 2853......... என்று ஒரு கணக்குப் போட்டு முடிவு கட்டிக் கொண்டு போகையில், சங்கரனை நோக்கி, "சங்கரன்! புள்ளியை எந்த இலக்கத்தின் மேல் போடுகிறது? சொல் பார்ப்போம்!” என்பார். இவன் மறுமொழி சொல்லாமல் பித்துக்கொண்டவன் போலிருப் பான். அவர், "என்னடா விழிக்கிருய்?" என்று கேட்டுத் திட்டிய பிறகு அடுத்த பையனிடம் வினவுவார், அடுத்தவன் ஏது சொல்கிருன் என்பதைக்கட கவனி யாமல், இவன் மனத்திற்குள், விழி, இழி, கிழி, பிழி, வழி, அழி, பழி. மொழி, ஒழி, புள்ளி, உள்ளி, பள்ளி, அள்ளி, கிள்ளி, தெள்ளி, வெள்ளி என்று அடுக்கிக் கொண்டே போவான்,