பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£34 படாது. ஜமீன் போஷணையிலேயே அந்த நயமுண்டா கிறது. பகல் ஒன்றரை மணிக்கு ஸ்நானம் தொடங்கும். வெந்நீரிலேதான் ஸ்நானம் செய்வார். ராமசாமி கவுண்டர் ஸ்நானஞ் செய்வதென்ருல், அது சாதாரண காரியமன்று, ஜலத்தையெடுத்து ஊற்றுவதற்கு இரண்டு பேர். உடம்பு தேய்க்க இரண்டு பேர். தலை துவட்ட ஒருவன். உடம்பு துடைக்க ஒருவன், வேறு வேஷ்டி கொண்டு அரையிலுடுத்த ஒருவன், நேபாளத்து ராஜாவின் பிரேதத்துக்குக்கூட இந்த உபசாரம் நடக்காது. ஸ்நானம் முடிந்தவுடனே பூஜை. ஜமீந்தார் பூக்களை வாரி வாரி முன்னே வைத்திருக்கும் விக்கிரகத்தின் மேல் வீசுவார். பூஜா காலத்தில் ஸ்தல பாகவதர்கள் வந்து பாடுவார்கள். சில சமயங்களில் சங்கீத விஷயமாக சம்பாஷணைகள் நடப்பதுண்டு. ஜமீந்தார் தாம் கவனம்’ செய்த கீர்த்தனைகளைப் பாகவதர்களிடம் பாடிக்காட்டு வார். (சங்கீதத்திலும் சாஹித்தியத்திலும் ராமசாமிக் கவுண்டர் புலி. அந்த சங்கதி ஞாபகமிருக்கட்டும்.) ஒருவன் சமஸ்தான வித்துவான் - அண்ணுத்துரை அய்யர், தோ டி - நாராயணய்யங்கார், பல்லவிவேதாசல குருக்கள் முதலிய வித்துவான்களனைவரும் வந்து கூடியிருந்தனர். அண்னத்துரை அய்யரை நோக்கி ஜமீந்தார் "நான் அடாணுவில் மானேயங்கே போன வகை யென்னடி என்ற வர்ணமெட்டிலே பரமசிவன் மேல், ஒரு சாஹித்யம் பாரித்திருக்கிறேன். (ஒரு கீர்த்தனை செய்திருக்கிறேன் என்றர்த்தம்) அதை நீங்கள் "கேட்க வில்லையே' என்ருர். உத்தரவாகட்டும்'என்ருர் பாகவதர். (சொல்லு கேட்போம் என்றர்த்தம்.)