பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235 உடனே ஜமீந்தார் ஜ ல தோஷ ம் பிடித்த பன்னிரண்டு குயில்கள் சேர்ந்து சுருதியும், லயமும் ஒன்றுபடாமல் பாடுவது போன்ற தமது திவ்விய சாரீரத்தை எடுத்துப் பின்வரும் கீர்த்தனை பாடலாயினர். ஒரு பாகவதரி தம்பூரில் கருதி மீட்டினர். ஜமீந்தார் அந்த கருதியை லக்ஷயம் பண்ணவில்லை. ராகம்: அடான தாளம்: ரூபகம் மானேயங்கே போனவகை யென்னடி என்ற மெட்டு பல்லவி மானே கையில் தானே தரித்தானே-ஒரு மாதைத் தரித்தானே மழுவை தரித்தானே (unm) பல்லவியில் முதல்வரி பாடி முடிப்பதற்குள்ளாகவே அண்ணுதுரை பாகவதர். 'பேஷான கீர்த்தனம்! பேஷான கீர்த்தனம்! சபாஷ்! சபாஷ்!" என்ருர். "ஒரு வரி பாடு முன்னே இது நல்ல கீர்த்தனையென்று எப்படித் தெரிந்தது?" என்று ஜமீந்தார் கேட்டார். "ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் பார்த்தால் போதாதா?” என்ருர் பாகவதர். ஜமீந்தாரும் இந்த நியாயத்துக்குக் கட்டுப்பட்டு, சந்தோஷம் மிகுந்தவராய் மேலே பாடலா யினர். பல்லவி மானே கையில் தானே தரித்தானே ஒரு மாதைத் தரித்தானே மழுவை தரித்தானே (una) அனுபல்லவி கோனே சிவனே குருவே பருவே மெய்ஞ் ஞான பான மோனமான காதாதாமரைப் பாதா (மா)