பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£36 "அனுபல்லவியில் இரண்டாம் அடியில் "முடுகு" வைத்திருக்கிறேன் பார்த்தீர்களா?" என்று ஜமீந்தார் கேட்க, பாகவதர்களெல்லோரும் பேஷ்! பேஷ் பேஷ்" என்றனர், சரணம் எந்தனை மோr கதியினில் சேர்த்திட இன்னுமு மாகாதா?-உன்னைச் சொந்தக்குல தெய்வ மென்று கித்தந்து தி சொன்னது போதாதா? விந்தை யுடனிங்கு வந்தென்னை யாளவும் மெத்த மெத்த வாதா? வந்தனை தந்துனைப் போற்றிடும் ராமசா மிக்க வுண்ட ராஜ போஜனுக் கருள் செய்யும் பாதா (unir) என்று கடைசியடியை இரண்டு முறை திருப்பிப் பாடி, ராமசாமிக் கவுண்டர், மிகவும் திருப்தியுடன், தியாகய்யர் நகுமோமு கீர்த்தனத்தை ஒரு சிஷ்யனிடம் முதல் முறை பாடிக் காட்டிய பிறகு புன்சிரிப்புச் சிரிப்பதுபோல நகைத்தருளினர். பாகவதர்களெல்லோரும் "சபாஷ்' சொல்லி கொட்டி விட்டார்கள். பிறகு அண்ணுத்துரை பாகவதர், மகாராஜா இந்த கீர்த்தனத்தை எழுதிக் கொடுத்தால் நான் வீட்டிலே போய் சிட்டைஸ்வரங்கள் சேர்த்துப் பாட்டையும் நன்ருகப் பாடம் செய்துக்கொண்டு வருவேன். இதை நித்தியம் பூஜா காலத்தில் பாடவேண்டுமென்று என்னுடைய அபிப் பிராயம் என்ருர். அதுக்கென்ன? செய்யுங்கள்' என்ருர் ஜமீன்தார்.