பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 மாட்டோம். ஜமீந்தார் அ வ ரீ க ளு க் கு இ ந் த அநுஷ்டானம் சரிபட்டு வந்தது. அவர் முப்பத்திரண்டு கவளத்திற்குக் குறைவாக ஒருபோதும் சாப்பிடுவதில்லை: ஒருபோதும் மெலிவதுமில்லை. பகல் போஜனம் முடிந்த வுடன் ஜமீந்தார் நித்திரை செய்யத் தொடங்குவார். அரமனைக்கு வெளியேகூடச் சில சமயங்களில் சத்தங் கேட்கும்படியாகக் குறட்டை விட்டுத் தூங்குவார். மாலை ஐந்து மணிக்கு விழிப்பார், விழித்தவுடன் ஆருவது அல்லது ஏழாவது முறை "ஆசமனம்". கொஞ்சம் பலகாரம் சாப்பிடுவார். உடனே ஐரோப்பிய உடை தரித்துக் கொண்டு கச்சேரிக்குப் போவார். அங்கே பலர் பல விதமான விண்ணப்பங்கள் கொண்டு கொடுப்பார்கள். அவற்றையெல்லாம் வாங்கிக்கொள்வார். அ த | வ து பக்கத்தில் நிற்கும் குமாஸ்தா அவற்றை வாங்கி வைக்கும் போது இவர் பார்த்துக் கொண்டிருப்பார். விண்ணப்பங் கள் வாங்கி முடிந்த பிறகு காகிதங்களில் கையெழுத்துப் போடும் காரியம் தொடங்கும். பழைய மனுக்கள், திவான் கச்சேரிக் க டி த ங் க ள், இவற்றின்மேல் தனதிஷ்டப்படி யெல்லாம் உத்தரவுகளெழுதி வைத்திருப் பான். அவற்றின் கீழ் வரிசையாகக் கையெழுத்துப் போட்டுக் கொண்டே வரவேண்டும். இன்னின்ன வியவகாரங்களைப் பற்றிய காகிதங்களின்மேல் இன்னின்ன உத்தரவுகள் எழுதப்பட்டிருக்கின்றன என்ற சமாசாரமே லேகியக் கவுண்டருக்குத் தெரியாது. ஒரு சமயம் வழக்கப்படி உத்தரவுகள் தயார் பண்ணிக்கொண்டு வரும் குமாஸ்தா ஊரிலில்லை. அவன் இடத்திற்கு மற்ருெருவன் வந்திருந்தான். ஜமீந்தார் தாமே மனுதாரிகளுக்கு உத்தரவு எழுதுவாரென்று அவன் நினைத்து, மனுக்காகிதங்களை அப்படியே மேஜை மேல் வைத்துவிட்டான். ஜமீந்தாரும் விட்டுக்கொடாத