பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239 படி, அந்த மனுக்களை ஒவ்வொன்முகத் திருப்பிப் பார்த்து மேலே உத்தரவுகள் எழுதத் தொடங்கினர். கவுண்டபுரத்துக்கு மேற்கே இரண்டு நாழிகை தூரத்திலுள்ள நடுக்கனூர் கிராமத்திலிருந்து வில்வபதிச் செட்டி என்ற ஒரு கிழவன் பின்வருமாறு மனுக் கொடுத்திருந்தான். "பிதா மகாராஜா காலத்தில் நான் மிகவும் ஊழியம் செய்திருக்கிறேன். இப்போது பலவித கஷ்டங்களால் நான் ஏழையாய்ப் போய், மக்களையும் சாகக் கொடுத்து விட்டுத் தள்ளாத காலத்தில் சோற்றுக்குச் சிரமப்பட்டு கொண்டிருக்கிறேன். மகாராஜா அவர்கள் சமூகத்தில் கிருபை செய்து ஜீவனத்துக்கு ஏதேனும் மனேவர்த்திச் செலவிலே கொடுக்கும்படி பிரார்த்திக்கிறேன்." இந்த மனுவை ஜமீந்தார் தமது குமாஸ்தாவின் உதவியினல் வாசித்து முடித்துவிட்டு, பிறகு காகிதத்தின் புறத்திலே அடியிற் கண்டபடி உத்தரவெழுதி விட்டார். "தாசில்தாரர் குமரப் பிள்ளைக்கு-வில்வபதிச் செட்டி பேருக்கு நிலம் விட்டு விடவும்.” இதை எழுதி நீளமாக ராமசாமிக் கவுண்டர் என்று கையெழுத்துப் போட்டு தீர்த்து விட்டார். இப்படிப் பலவிதமான உத்தரவுகள் பிறப்பித்து ஜமீந்தார் தமது கச்சேரியை முடித்து விட்டார். மறுநாள் இந்த வில்வபதிச் செட்டியின் மனு திவான் கச்சேரிக்கு வந்து சேர்ந்தது. கவுண்டருடைய உத்திரவை திவான் படித்துப் பார்த்தார். தாசில்தார் குமாரப் பிள்ளையின் அதிகாரத்துக்குட்பட்ட பூமியில் மேற்படி செட்டிக்கு ஜீவனம்சத்துக்கு நிலம் விட வேண்டுமென்று கவுண்டரவரி களுடைய திருவுள்ளம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிந்துக் கொண்டார். ஆனல் எவ்வளவு நிலம், எந்த விதமான