பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 நிலம், என்ன நிபந்தனைகள், முதலிய விவரங்களொன்றும் தெரியவில்லை. உத்தரவை அடித்துவிட்டுத் திவான் வேறு மாதிரி எழுதிக் கொண்டுவந்து ரகஸ்யமாகக் கவுண்டரின் கையெழுத்து வாங்கிக்கொண்டு போய்விட்டார். உத்தர விலுள்ள பிழைகளை திவான் எடுத்துக் காட்டியபோது குற்றமுழுவதையும் குமாஸ்தாவின் தலையிலே போட்டு விட்டார். "நான் மனுவை வாசித்துப் பார்க்கவேயில்லை. வேறே பெரிய விவகார மொன்றிலே புத்தியைச் செலுத்திக் கொண்டிருந்தேன். இந்த மனு என்ன விஷயம் என்று குமாஸ்தாவைக் கேட்டேன். செட்டி மிகவும் ஏழை; அவனுக்கு உதவி செய்ய வேண்டியதுதான் என்று குமாஸ்தா சொன்னன். தங்களுடைய அபிப்பிராயந் தெரிந்துதான் சொல்லுகிருனென்று நினைத்து உத்தர வெழுதி விட்டேன். மனேவர்த்தியிலே பணத்துக்குத்தான் திண்டாடுதே! அதிலே இந்த இழவையுங்கொண்டு போய்ச் சேர்ப்பதெப்படி? இதை யோசனை செய்துதான் குமரப் பிள்ளை இலாகாவில் நிலம் விட்டுக் கொடுக்கும்படி எழுதினேன். எனக்கு அந்த வில்வபதிச் செட்டியை போதுமானபடி தெரியும். அவன் சுத்த அயோக்கியப் பயல். பட்டினி கிடந்து செத்தால் சாகட்டுமே! நமக்கென்ன!" சாயங்காலத்துக் கச்சேரி முடிந்தவுடன், கவுண்டர வரிகள் குதிரை வண்டியிலேறி ஊரைச் சுற்றி சவாரி செய்துக் கொண்டு வருவார். கவுண்ட நகரம், சரித்திர பெருமையும், rேத்திர மகாத்மியமும்’ வாய்ந்த ஊராயினும், அளவில் மிகவும் சிறியது. ஐந்து நிமிஷத் துக்குள் குதிரை வண்டி இதைச் சுற்றி வந்து விடும். இதற்கு பன்னிரண்டிடத்தில் வாங்கா ஊதுவார்கள். இந்த "வாங்கா' என்பது பித்தளையில் ஒருவித ஊது வாத்தியம். பறையர் இதனை ஊதிக் கொண்டு ஜமீந்தார