பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 நடக்கும். இவர் இப்படி கோழையாக இருப்பதைக் கருதி யாரும் நகைக்கலாகாது. அர்ஜுனனும், வீமனும், அபிமன்யுவும் தோன்றிய சந்திர வம்சத்தில் நேரே பிறந்த தாக இதிகாஸங்களிலே கோஷி க் க ப் படுகின்ற கவுண்டனுர் ராஜகுலத்தில் இவர் சேர்ந்திருந்தும், இவ்வாறு கொஞ்சம் அதைரியப்படுவதற்குச் சில ஆழ்ந்த காரணங்களுண்டு. இவருக்குப் புத்திர பாக்கியம் இல்லை. அதற்காகப் பலவித ஹோமங்கள், பூஜைகள், கிரக சாந்திகள், தீர்த்த யாத்திரைகள், யந்திர ஸ்தாபனங்கள் முதலியன செய்துக் கொண்டு வருகிருர். இந்த அவசரத்திலே குதிரை யிலிருந்து தவறி விழுந்து உயிர் போய்விடுமானல் பிறகு இவருடைய சக்ராதிபத்யத்துக்கு ஒரு மகன் பிறக்க இடமே இல்லாமல் போய்விடுமல்லவா? எத்தனை பேர் குதிரையிலிருந்து விழுந்து செத்திருக்கிருர்கள். அதையும் கவனிக்க வேண்டாமா? சில மாதங்களுக்கு முன்பு கூட ருஷியா தேசத்தில் ஒரு குதிரைப் பந்தயத்திலே ஒருவன் வேலி தாண்டி விழுந்து உயிர் போய்விட்டதாக 'சுதேச மித்திரன்’ பத்திரிகையில் எழுதியிருந்த விஷயத்தை இவரிடம் யாரோ சொல்லவில்லையா? நாலு காரியத்தையும் யோசனை செய்துதானே நடக்க வேண்டும். ஒரு தரம் போன உயிர் திரும்பிவிடுமா? சாயங்காலத்து சவாரி முடிந்தவுடனே கவுண்டரவர்கள் அரண்மனைக்குள் வருவார். நாலைந்து பேராக இருந்து, இவருடைய ஐரோப்பிய உடுப்புகளைக் கழற்றி எறிந்துவிட்டு, வேஷ்டி உடுத்துவார்கள். உத்தரீயத்தைத் தாமாகவே வாங்கி மேலே போட்டுக்கொள்வார். மனுஷன் வேலைக்கு மாத்திரம் பின் வாங்கமாட்டார். அது ஒரு குணம் இவரிடத்தில். பிறகு கைகால் சுத்தி செய்துக்கொண்டு லேகியம்"சாப்பிட்ட பிறகு சாய்வு நாற்காலிக்கு வந்து விடு