பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

247 வேண்டாம்" என்முன். தனக்குக் கவி பாடத் தெரியும் என்பதையும், அவருக்கு அத்தொழில் தெரியாதது பற்றித் தனக்கு அவரிடம் மிகவும் அவமதிப்புள்ள தென்பதை யும், அவருக்குக் குறிப்பிட்டுக் காட்டும் பொருட்டாக ஆ...சாரியர் தமது உள்ளத்திலே எழுத்த கோபத்தை அச்சத்தினுல் நன்ருக அடக்கி வைத்துக் கொண்டு "பாண கவி செய்யுள் பாடுவதில் இளைத்தவரென்று நினைத்தாயோ? ஆஹா முத்திருள கவுண்டா! நீ ஸ்மஸ்கிருதம் படித்திருக்கவேண்டும். படித்திருந்தால் நீ பாண கவிக்கு நிகரானவன் என்பது உனக்கே நன்ருகத் தெரிந்திருக்கும்" என்று திருவாய் மொழிந் தருளினர். (சாதாரணமாக ஆ.சாரியாரைப் போன்ற மகான் கள் பேசுவதை "திருவாய் மலர்ந்தருளினர் என்றுபுதிதாகச் சொல்வதற்கு இரண்டு காரணங்களுண்டு. அவருக்குத் தமிழ் பாஷையில் அதிக பழக்கமில்லாத போதிலும் திருவாய்மொழி, பிரபந்தம் முழுவதும் பாராமல் குட்டி யுருவாகச் சொல்லக்கூடியவரென்பதை நாம் ஒருவாறு குறிப்பிட விரும்புதல் சாமான்ய காரணம். சரியான காரணம் இன்னும் சில வரிகளுக்கப்பால் தானே விளங்கும்.) பிறகு முத்திருளக் கவுண்டன் தனக்கு ஸ்மஸ்கிருதம் தெரியாதென்பதை ஆ.சாரியார் கேலி பண்ணுகிருரென்று நினைத்து, தலையை நேரே தூக்கிக் கொண்டு, அவனது மீசை, கிருதாக்கள் துடிக்க பின் வருமாறு உபந்நியாசம் செய்யலான்ை. "சாமி, அய்யங்கார்வாளே, சாமிகளே; அப்படியா வந்து சேர்ந்தீர்கள். (சபையோt நகைக்கிருfகள்) இந்தக் க ைத யா? இதெல்லாம் முத்திருளனிடம்