பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கேட்டான் சிறுவன் சுப்பையா. இயலாதது எதுவுமே இல்லை' என்ருன். இருநூறு வரிகள் கொண்டதோர் உலாமடல் பாடினன். புலவர்களிடம் படித்துக் காம் டினன். எல்லாரும் வியந்தனர். ஆனல் ஜமீந்தார் சபையில் அதை வைக்க மறுத்தனர். சுப்பையா சீறினன். அந்த உலா மடலைக் கிழித்துப் போட்டான். பாரதி என்ற பட்டம் சுப்பையாவுக்கு எப்படிக் கிடைத்தது? யார் கொடுத்தார்? எட்டயபுரம் ஜமீந்தார் இப்பட்டம் சூட்டினர் என்று பாரதியார் பற்றிய நூல்கள் பலவற்றில் காண்கிருேம், இது தவறு. பாரதி என்ற பட்டம் அளித்தவர்கள் புலவர்கள்; ஜமீந்தார் அல்லர். சோமசுந்தர பாரதியார் அவர்கள் சுப்பிரமணிய பாரதியின் பள்ளித் தோழர்; இளமை நண்பர்; பாரதி யாருடன் நன்கு பழகியவர். அவர் இதுபற்றி என்ன சொல்கிருர்? 'பாரதியார் 11 வது ஆண்டில் புலவர்கள் கூடிய தோர் பெரும் சபையில் புதிது புதிதாகக் கொடுத்த அடிகளைக் கொண்டு பூர்ண கவிகளை விரைந்து இயற்றிச் சபையோரை வியப்பித்தபோது, அவருடைய கவித்திறமை யையும், அமிர்த வாக்கையும் கண்டு சந்தோஷப் பட்ட புலவர்களால் முதல் முதல் 'பாரதியார் என்ற பட்டம் கொடுக்கப் பெற்ருர், அன்று முதல் இவரை யாவரும் பாரதியார் என்றே அழைக்க ஆரம்பித்தார்கள்.” இவ்வாறு கூறுகிருர் சோமசுந்தர பாரதியார். குருகுகதாஸப்பிள்ளை என்பவர் எட்டயபுரத்தைச் சேர்ந்தவர்; சோதிட வித்வான்; பாரதியாரின் இளமை நண்பர்; பாரதியாரை நன்கு அறிந்தவர். இவர் என்ன சொல்கிருர்?