பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

949 தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்து முதலே உண்ட பாலனை யழைத்ததும்...ம்...ம்...ம், தண்டமிழ்ச் சொலோமறு புலச் சொற்களோ சாற்றீர்?" என்ற பாட்டைக் கேட்டதுண்டா? இந்தப் பாட்டிலே சில வார்த்தைகள் முத்திருள னுக்கு சமயத்தில் ஞாபகம் வரவில்லையாதலால் அவற்றை விழுங்கிவிட்டு பிழையாகப் பாட்டைச் சொல்லி முடித் தான். சபையில் பலருக்கு "இந்தப் பாட்டு நன்முக ஞாபகமுண்டு. ஆயினும் அவனைத் திருத்தப் போனல் தங்கள்மீது பாய்ந்து விடுவானென்று பயந்து புலவோர்கள் வாய்மூடி மெளனமாக இருந்துவிட்டார்கள். அவர்கள் திருத்தாமல் இரு க் கும் படி யா க வே முத்திருளன் அவர்களைச் சுற்றி நோக்கி மிகவும் பயங்கரமானதோர் பார்வை பார்த்துவிட்டு மேலே கர்ஜனை செய்கிருன். "இனி வடமொழியில் தான் வேதம் உளதென்று நீர் ஒருவேளை சொல்லலாம். அஃது எங்கள் தேவார திருவாசகங்களுக்கு நிகராகுமா? இந்தப் பாடலுக்கு நான் இப்போது பொருள் சொல்லமாட்டேன். உமக்குத் தெரியாவிட்டால், வீட்டிலே போயிருந்து கொண்டு படிப்புத் தெரிந்த வாலிபப் பிள்ளை எவனையேனும் அழைத்து அவனிடம் பொருள் கேட்டுக்கொள்ளும்." (சபை கலீரென்று நகைக்கிறது. ஆ...சாரியர் முடி சாய்ந்து விட்டார்.) "ஆங்காணும், தமிழ்ப் பாஷைக்கு நேரானதோர் பாஷையில்லை. அதிலும், வடமொழி நமது தமிழ் மொழிக்குச் சிறிதேனும் நிகராகமாட்டாது. தமிழ் கற்ருேர் அனைத்துங் கற்ருேர். அறியும், அறியும் அறியும். இனி வித்துவான்களுடைய சபையிலே ஊத்த வாய்திறக்க வேண்டாம்."