பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 வாயிலே நுரைக்கும்படி முத்திருளன் இவ்வாக்கியம் சொல்லி முடித்து, மேலே பேச மூச்சில்லாமல் கொஞ்சம் நின்ருன். அப்போது ஆ.சாரியர் மிகவும் ஹீனஸ்வரத் திலே, "முத்திருளா, என்ன இப்படிக் கோபித்துக் கொள்ளுகிருயே. நான் பாணகவிக்கு நிகரென்று உன்னை ஸ்தோத்திரமாகத்தானே சொன்னேன். விஷயத்தைக் கவனியாமலே வீண் கோபம் செய்கிருயே" என்று திருவாய் மொழிந்தருளினர். சங்கரன் யமகம் பாடி அரங்கேற்றியது. மேலே கூறப்பட்ட போராட்டம் முடிந்து, ஒருவாறு கவுண்டர் சபை கலைந்தது. புலவர்களெல்லாம் போன பின், தனியாக இருக்கும்போது, கவுண்டர் முத்திருளனை நோக்கி 'ஏதோ நல்ல சமாசாரம் கொண்டு வந்தாயே, அது சொல்வி முடியுமுன்பாக, அந்த இழவு பார்ப்பான் சண்டை தொடங்கி விட்டான். நீ நல்ல போடு போட் டாய். அந்தப் பார்ப்பானுக்கு வேணும். அது போகுது. சொல்ல வந்த சங்கதியைச் சொல்' என்ருர், "நம்ம சுப்பிரமணிய அய்யர் மகன் சங்கரன் சமூகத் தின் மேலே ஒரு யமகம் பாடியிருக்கிருன். நல்ல பாட்டு. அடியேனலேகூட அவ்வளவு ஷோக் கான பாட்டு பாட முடியாது. அதை சமூகத்திலே அரங்கேற்ற வேணும். மகாராஜா பையன் சிறுவனக இருந்தபோதிலும் புத்தி ரொம்பக் கூர்மை. அரண்மனைக்கு இத்தனை புலவர்கள் வருகிருர்களே, அவர்களெல்லாரையும் விட்டு அடியே னிடத்தில் வந்தால்தான் இந்தக் காரியம் சாயுமென்று தெரிந்துகொண்டான். அவன் வயதெவ்வளவு? நம்ம மகாராஜாவினுடைய கிருபை இன்னன் மேலே பரிபூரின மாக விழுந்திருக்கிறதென்று ஊகித்துக் கொள்வ தென்முல். அதென்ன சாமான்யமாகச் சிறுபிள்ளைகளுக்கு