பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

353 மாலை ஐந்துமணி அடித்ததும், பள்ளிக்கூடத்திலிருந்து நேரே சங்கரன் ஜமீன்தாருடைய சபைக்கு வந்து விட்டான். மேலே சொல்லப்பட்ட வித்வான்களெல் லோரும் வந்து சபையில் கூடியிருந்தனர். தி வா ன் முருகப்ப முதலியார், தாசீல்தார் மாரிமுத்துப் பிள்ளை, இன்னும் சில கவுண்டப் பிரபுக்கள், உத்தியோகஸ்தர் எல்லோரும் வந்திருந்தனர். ஜமீந்தார் சங்கரனை நோக்கி, "எங்கே? தம்பி உன் பாட்டை வாசி, கேட்போம்" என்ருர். சங்கரன் சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை வெளியே உருவிப் படிக்கத் தொடங்கினன். பையனுக்கு வாய் குழறுகிறது. உடம்பெல்லாம் வியர்க்கிறது. சரஸ்வதிக்கு லஜ்ஜை யதிகம். லக்ஷ்மியைப் போல நாணமற்றவளன்று. சங்கரன் போன்றவர்களிடம் விளங்கும் போலி-சரஸ்வதிக்குக் கூட ஆரம்பங்களில் கொஞ்சம் லஜ்ஜை உண்டாகும். நாளாக, நாளாகத்தான் லஜ்ஜை, நாணம் எல்லாங்கெட்டுப்போய் தெருவேசிகளின் இயல்புண்டாகி விடும். சங்கரன் படும் அவஸ்தையைக் கண்டு முத்திருளக் கவுண்டன் அவனை உற்சாகப் படுத்தும் பொருட்டாக. "பயப்படாதே சாமி, தைரியமாய் வாசி. உயர்ந்த கவியாச்கதே. இதிலென்ன வெட்கம்? மேலும் நம்ம மகாராஜாவின் முன்னிலையில் நம்முடைய படிப்பைக் காட் டாமல் யாரிடம் காட்டுவது? இதில் கூச்சப்படலாமா?" என்ருன். மகாராஜ ராஜபூர், ராஜகுல தீய ராமசாமி கவுண்டர் மீது சங்கரய்யர் பாடிய யமக ஆறு சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்.