பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 சூரிய குலத்தவனாகவும், நமது மகாராஜா சந்திரகுலத் திலகமாகவும் இருப்பினும் பெயரொற்றுமை கருதியும், வீரியம் முதலிய குணப் பெருமைகளின் ஒப்பைக் கருதியும், கவி இங்ங்னம் எழுதியிருக்கிருர். மேலும், அரசன் மகா விஷ்ணுவின் அவதாரமென்று வேதங்கள் முழங்குதலறிக. இராமனும் மகாவிஷ்ணுவின் அவதாரமென்றே கருதப் படுதலுணர்க. கவுண்டனூரில்"-கவுண்ட மாநகரத்தின் கண்ணே, நீர்வளம், நிலவளம், பாவளம் முதலியன பொருந்தியதாய் அஷ்ட லக்ஷ்மிகளுக்குத் தாய்வீடாய் அமராவதி போல் விளங்கும் நமது ராஜதானியிலே: "கவுண்டவுண்ட ரா ம சா மி தி துரையே.-ஏ கவுண்டா! (கவுண்ட வமிசத்தில் உதித்த மன்ன) உண்ட (அறுவகைச் சுவைகளும் பொருந்திய இனிய உணவை எப்போதும் சாப்பிடுகிற) ராம சா மி த் துரையே! எல்லோரும் உண்பவரேயாயினும் நமது மகாராஜாவுக்கு மாத்திரம் உண்ட என்னும் அடைமொழி கொடுத்த தேனே என்ருல், எல்லோரும் உண்பது போலன்று, இவர் தேவர்களைப் போல அரிய உணவுகளை உண்ணும் பாக்கிய வான் என்பதைக் குறிப்பிடும் பொருட்டே என்க." காதல் சின்னச் சங்கரன் யமகம் பாடி அரங்கேற்றிய புகழ், கவுண்ட ராஜ்யம் முழுவதிலும் பரவி, தத்தளித்துப் போய் விட்டது. கவுண்டர் சபையில் வந்த வேடிக்கைகளை யெல்லாம் மேல் அத்தியாயத்தில் நான் விஸ்தாரமாக எழுதவில்லை. கவுண்ட சபையின் வர்ணனை எனக்கே சலிப்படைந்து போய்விட்டது. படிப்பவர்களுக்கும்