பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£60 ஆரம்பங்களிலிருந்து பெரிய விளைவுகள் ஏற்படும் என்றர்த்தம். காதல் சமாச்சாரமும் அப்படித்தான். ஒரு பார்வை, ஒரு தட்டு-ஒரே பார்வை ஒரேதட்டாக முடிந்து விடும். ஒரு பேச்சு, ஒரு சிரிப்பு-மரண பரியந்தம் நீங்காத பந்தமேற்படுத்தி விடும். ஆனால், இருளாயிக்குச் சங்கரன் விஷயத்தில் அப்படி நிலைத்த காதல் இருந்த தென்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. சங்கரனுக்கு மாத்திரம் அவளிடம் பரிபூரண மோகம் ஏற்பட்டிருந்தது. அது மணத்திலே போய் நிற்கவில்லை. ஏறக்குறைய மரணத்திலே கொண்டு விட்டுவிடத் தெரிந்தது. முத்திருளக் கவுண்டனுடைய தகப்பன், ஒரு தொண்டு கிழவன். கண் இல்லாமல் வீட்டிலேயே உட்கார்ந்திருந் தான். அவனே மனித விவகாரங்கள் இல்லாத ஒரு தனித் தீவாந்திரத்திலே கொண்டுவிட்டு, இரண்டு காணி நிலம் மாத்திரம் கொடுத்து பயிரிட்டுக் கொள்ளும்படிச் சொன்னுல்-அதாவது, கண்களையும் திருப்பிக் கொடுத்த பிறகு-அந்த இரண்டு காணிகளில் முக்கால் காணியை வெற்றிலைத் தோட்டமாக்குவான். ஒரு முழுக் காணியிலே புகையிலைத் தோட்டம் போட்டுவிடுவான். மிஞ்சின கால் காணியிலேதான் நெல் விதைப்பான்-பாக்கு மரம் வைத்தது போக. காய்கறிகள் கூட அவசியம் இல்லை. இந்த இரண்டு காணிக்கு ஒரு சின்னக் குளம் கொடுக்கமாட்டார் களா? அதில் மீன்கள், நண்டு, அகப்படாதா? ஒரு பார்வை பார்த்துக் கொள்வான். கிழ திருதராஷ்டிர’க் கவுண்டனுக்குப் புகையிலையிலே எவ்வளவு பிரியமோ அவ்வளவு பிரியம் கம்பராமாயணத் திலேயுமுண்டு. யாரேனும் வந்து கம்பராமாயணத்திலே ஒரு பாட்டு வாசித்து அர்த்தம் சொல்லும்படி கேட்டால் சரியாகச் சொல்லுவான். அவனும் கவுண்டனூர்த் தமிழ் புலவர்களிலே ஒருவன். ஆனால், சங்கரன் காலத்துப்