பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261 புலவர்களைக் காட்டிலும் அவன் விசேஷந்தான். அவனுக்கு வேருென்றும் இல்லாவிட்டாலும் ஒரு பெரிய காவியத் துக்குப் பொருள் சரியாக சொல்லத் தெரியும். பின்னிட்ட புலவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. பாட்டுக் கட்டத்தான் தெரியும். முத்திருளக் கவுண்டனுடைய நட்பு ருசி கொடுக்கத் தொடங்கியதில் இருந்து, கிழக் கவுண்டனிடம் கம்பராமாயணம் கேட்க ஆரம்பித்தான். மாலைதோறும் பள்ளிக்கூடம் விட்டவுடனேயே முத்திருளக் கவுண்டன் வீட்டுக்குப் போய்ப் பாடல் கேட்கத் தவறுவ தில்லை. இரவு எட்டு மணிக்குத்தான் திரும்பி வருவான். "தாத்தனிடம் அர்த்தம் கேட்க வருது அய்யர் வீட்டுப் பிள்ளை' என்று இருளாயிக்கு சங்கரனிடம் பிரியமேற் பட்டது. இந்தப் பிரியம் நாளுக்குநாள் பலவிதங்களிலே பக்குவமடையலாயிற்று. ராமாயணப் பாடத்துக்குப் போன இடத்திலே சங்கரன் "மன்மத கலை படிக்கத் தொடங்கினன். கிழவனுடைய குருட்டு விழிக்குக் கூட விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசமாய் விட்டது. ராமாயணக் கதை குறைகிறது. சிரிப்பும் வேடிக்கைக் கதையும் அதிகப்படுகிறது; கிழவனுக்கு அர்த்தமாகா. வீட்டில் அந்தப் பெண்ணைத் தவிர வேறு ஸ்திரீயே கிடை யாது. முத்திருளக் கவுண்டன் மனைவி, கிழவன் மனைவி இருவரும் செத்து நெடுங்காலமாய் விட்டது. இருளாயியும் சங்கரனும் சி ேந க மா. க இருப்பதில் கிழவனுக்கு அதிருப்தியே கிடையாது. அய்யர் வீட்டுப்பிள்ளைt ஐயோ பாவம்! அதுக்கு என்ன சூது தெரியுமா? வாது தெரியுமா? குழந்தைகள் தானே! விளையாடிக் கொண்டிருக்கட்டும். அதிலே தப்பிதம் வராது என்று கிழவன் தனக்குத்தானே மனதறிந்த பொய் சொல்லிக்கொண்டு சும்மா இருந்து விடுவான். "தப்பிதம் நடந்தாலும் குடி முழுகிப் போய்