பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263 விடாது என்பது "திருதராஷ்டிர கவுண்டனுடைய தாத் ւյՌաւb. இருளாயிக்குப் பதினறு வயது என்று சொன்னுேம். அப்போது சங்கரனுக்கு வயது பதினேழு, "ஜோடி சரி யாகவே இராது. ஆல்ை, ஐரோப்பியர் சொல்வது போல மன்மதன் குருட்டுத் தெய்வம். (கண்ணில்லாமல், குறி பார்த்து அம்புகள் போடுவது கஷ்டம். ஆனால், தெய்வதி துக்கு எதுவும் பெரிதில்லையல்லவா? மேலும் கவிகளுக்கும் புராணக்காரர்களுக்கும்கூடப் பெரும்பாலும் கண் விஷயம் அந்த மன்மதனப் போலவேதான்.) எப்படியோ அவர்களிடையே காதல் செடி பெரிதாகி வளர்ந்து பூப்பூத்து காய் காய்த்துப் பழம் பழுக்கத் தொடங்கி விட்டது. பழங் க .ெ ௗ ன் ரு ல் யாரும் தப்பெண்ணங் கொண்டுவிட வேண்டாம். இவர்களுடைய காதல் செடியிலே ஏராளமாகப் பழுத்துத் தொங்கிய பழங்கள் சங்கரன் செய்த கவிகளைத் தவிர வேருென்று மில்லை. இருளாயி விஷயமாகச் சங்கரன் சுமார் 2000 கவிகள் வரை பாடித் தீர்த்து விட்டான். இப்படியிருக்கையில் இவ்விருவரின் சுகத்துக்கு இடை யூருன ஒரு செய்தி வந்துவிட்டது. இவர்களுடைய காத லாகிய மரத்திலே இடிபோல் விழுந்த செய்தி. (கதை முடியவில்லை } நமது கருத்து சின்னச் சங்கரன் கதை பாரதியின் சுயசரிதமே என்று வ. ரா: ரா. அ. பத்மநாபன் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது ஏற்கக்கூடியது அன்று. பாரதி தம் இளம் பிராயத்தினைத் தம் 'சுய சரிதத்திலே வடித்துக் காட்டியிருக்கிருர், எனவே இன்னொரு கதை தேவையில்லை,