பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 தமிழ் நாட்டுக் கதைகளில் இத்தகைய பாணி கையாளப் பட்டதே யில்லை எனலாம். அப்படிப்பட்ட புதுமை என்ன? இது ஒரு நையாண்டிச் சித்திரம். நையாண்டி வேறு; ஹாஸ்யம் வேறு. நையாண்டிக்கு மற்ருெரு பெயர்தான் கிண்டல்: குத்தல், வாழைப் பழத்தில் ஊசி சொருகுவது போல் மிக மென்மையாக எள்ளி நகையாடுவது. நையாண்டி ஊன்றிப் படித்தாலன்றி புலப்படாது. ஹாஸ்யம் மேலெழுந்த வாரியாகவே தெரியும். பாரதியின் நையாண்டிக்குச் சிறந்த உதாரணம் கவுண்டபுரம் ஜமீந்தாரின் பவனி. கவுண்டாதி கவுண்ட, அண்ட பகிரண்ட, ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர ராமசாமி கவுண்டர் என்று அவருக்குப் பெரிய பெரிய அடைமொழிகளைக் கொடுக்கிரு.ரி. அத்தகைய சூராதி சூரன் ஆட்டு வண்டியில் தைரியமாக சவாரி செய்வதாகச் சொல்வது கிண்டல்; சோனிக் குதிரை மீது நடுங்கியபடி ஒரு கையில் கடிவாளத்தையும், மற்ருெரு கையில் உயிரையும் பிடித்துக்கொண்டு, பாதுகாப்புக்கு மறவர் சூழ்ந்து வர, பவனி வருவதாக வர்ணிப்பது அதைவிடப் பெரிய கிண்டல்: இவருடைய பாரத்தைத் தாங்காமல் திணறும் சோனிக் குதிரைமீது இவர் பயத்தில் திணறிக்கொண்டே பவனி வருகிருர் என்பது எவ்வளவு பெரிய கிண்டல்! 家 事 to: பிரபல ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர். அவருடைய நாடகங்களில் 'மிட் சம்மர் நைட்ஸ் டிரீம்' என்பது ஒரு சுப நாடகம் (காமெடி). அதிலே ஒரு ஹாஸ்ய பாத்திரம், அதன் பெயர் பாட்டம் இந்தப் பெயரின்