பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 அவள் உறவினர் ஸர் டோபி பெல்ச்சின் உதவியை நாடுகிருf. உறவினன் ஆக்சீக்கின் பலவீனங்களை நன்கறிந் தவன் பெல்ச். ஆக்சீக்கின் முட்டாள்தனத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு கொழுக்கிருன். ஒலிவியாவின் தரிசனம் கூட ஆக்சீக்குக்கு கிடைக்க வில்லை. ஏமாற்றமடைந்த இவன் ஸ்ரீ டோபியைத் திட்டு கிருன். அதே சமயம் அவ்வூர் கோமகனின் தூதுவன் ஒலீவியாவை பார்த்துவிட்டுத் திரும்புகிருன். டோபி ஆண்ட்ரூஸை அவனுடன் வாள்போர் செய்யத் துண்டு கிருர். ஸ்ர் ஆண்ட்ரூ அப்போது நடுங்கும் நடுக்கத்தை வர்ணிக்கிருர் ஷேக்ஸ்பியர். அது எப்படி இருக்கிறதென் ருல் கவுண்டபுரம் ஜமீந்தார் குதிரைச் சவாரி செய்யும் போது எப்படி நடுங்கினரோ அப்படி இருந்தது! இது மட்டுமா? ஆண்ட்ரூவுக்கும் ஜமீந்தாருக்கும் இன்னும் சில ஒற்றுமைகளும் உண்டு. தான் நாட்டியம்’ இலக்கியம், இசை ஆகிய எல்லாவற்றிலும் வல்லவட என்பது ஆக்சீக்கின் எண்ணம். இந்த இலக்கிய மேன்ை உபயோகிக்கும் சொற்களுக்கோ அரித்தமே மாறுபட்ல் தாக இருக்கும். உதாரணமாக தலை என்பதற்குப் பதித இவன் தவளை என்பான். அவன் அகராதியில் தவளை என்ருல் தலை என்பது பொருள். "அதோ வருகிருள், பாருங்கள். அவள் பெயர் மேரி. அவளுக்கு வணக்கம் தெரிவியுங்கள்! என்ருர் டோபி. உடனே ஆண்ட்ரூ "செல்வி மேரி வணக்கம் தெரிவி!" என்ருன் சிறிதும் தயக்கமின்றி. மற்றவர் நகைத்தனர். அதை அவன் சட்டை செய்யவே இல்லை.