பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269 கிறது, மோவாய்கட்டையைப் பார்த்தால் மாதுளம் பழத்தைப் போலி ரு க் கி றது. கிழ வி யி னு ைட ய மொட்டைத் தலையைப் பார்த்தால் திருப்பாற்கடலைப் போல் இருக்கிறது என்று திரும்பத் திரும்பக் காது புளித்துப் போகிற வரையில் வர்ணிப்பது: யமகம், திரிபு, பசு மூத்ர பந்தம், நாக பந்தம், ரத பந்தம், தீப் பந்தம் முதலிய யாருக்கும் அர்த்தமாகாத நிர்பந்தங்கள் கட்டி, அவற்றை மூடர்களிடம் காட்டி சமர்த்தனென்று மைேராஜ்யம் செய்து கொள்வது-இவைதான் அந்தக் காலத்திலே கவிராயர்கள் செய்த தொழில்." பாரதி காட்டுகிற இந்த கவிராயர்களுக்கும் போப் வர்ணிக்கிற "க்ரப் ஸ்டிரீட் புலவர்களுக்கும் எத்தகைய ஒற்றுமை! போப்பைவிட ஒருபடி உயர்ந்து விட்டார் பாரதி1 முத்திருளன். இவர்களில் ஒருவன். ஏன், கவுண்டபுர புலவர்களையெல்லாம் ஆட்டி ைவ ப் ப வ ன் என்று கூடச் சொல்லலாம். இவன் அறிந்ததாகக் கூறுவது தொல்காப்பியம். ஜமீந்தாரின் வலது கை என்பதால் இவனை எதிர்த்துப் பேசுவோர் எவருமிலர். ஜமீந்தாரின் பக்கபலம் இருந்ததால் இவன் யாரையும் லட்சியம் செய்யமாட்டான். ஆனல் இவனுக்கும் ஒரு நல்ல குணம் உண்டு. கை நீட்டி வாங்கிய கடனைப் பணமாகத் திருப்பாவிட்டாலும், அதற்குக் கைம்மாறு செய்யாமல் தூங்கவே மாட்டான். & 家 体 ஆங்கிலத்திலே ஒரு நையாண்டிக் கவிதை உண்டு. அதன் பெயர் மாக் ப்ளெக்னே". மாக் ப்ளெக்னே இதன் நாயகன். இந்தப் புலவன் எழுதிய கவிதைகள் அர்த்த