பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை சுப்ரமண்யம் என்பது முருகப்பெருமானின் திருப் பெயர். முருகனே தமிழர்களின் தெய்வம்: தமிழ்த் தெய்வம். முருகன் தீ வண்ணன், ஜ்வாலை உருவினன். "குகையில் வளரும் கனலே என்கிருர் பாரதியார். முருகன் போருக்கெனத் தோன்றியவன்; சூரபத்மனை மாய்க்கப் பிறந்த வீரன். இவ்வாறு நமக்குக் கந்தபுராணம் கூறுகிறது. எனவே சுப்ரமண்யம் என்ற அவதாரமே வீரத்தின் தோற்றம். தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அறியாமலோ நமது தமிழ்நாட்டு மக்கள் தமது பிள்ளைகளுக்குச் சுப்ரமண்யம் என்று பெயர் சூட்டுகிரு.ர்கள். இப் பெயர் சூட்டும்பொழுது பெற்ருேர்கள் என்ன கருதி இப்பெயர் சூட்டினர்களோ நாம் அறியோம். ஆனல் இப்பெயர் கொண்டோருள் பெரும்பாலோர் பிற்கால வாழ்வில் பெரும் வீரராக விளங்கியுள்ளார்கள். நமது தேசத்தின் விடுதலைப் போர் வரலாற்றைப் பார்த்தோமானல் இவ்வுண்மை புலப்படும். கதேசமித்திரன் பத்திரிகையைத் தொடங்கித் தமிழ் நாட்டு மக்களை அரசியல் போருக்குத் தயார் செய்த ஜி. கப்பிரமணிய அய்யரை மறக்க முடியுமா? பாரிஸ்டரி படிப்புக்காக லண்டன் சென்று, வீர சவர்க்கார், மதன்லால் தி ங் ரா முதலியவர்களுடன் தொடர்புகொண்டு, விடுதலைப்போரில் ஈடுபட்டு, மாறு