பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 பாரதியை மட்டம் தட்டக் கருதியிருந்த தமிழ் ஆசிரியர் புலிபோல் பாய்ந்தார். "என்ன கவிராயரே! பாரதி என்ற பட்டம் பெற்று விட்டீர். காளமேகம் போல் கவி பொழிவதாகப் பெயர் வாங்கி விட்டீர். இங்கே ஒன்றும் பொழியக் காணுமே!’ என்று குத்தலாகக் கூறினர். சட்டென்று பதில் கூறினர் பாரதி. 'மேகம், தான் விரும்பும் பொழுதுதான் மழை பொழியும். தமிழ்ப் பண்டிதருக்காகப் பயந்து பொழியாது. இதுகூடத் தமிழ் ஐயா அறியாததோ." வகுப்பில் இருந்த பிள்ளைகள் சிரித்தார்கள். தமிழ் ஆசிரியரின் முகம் கண்டிப் போயிற்று. வாய்மூடி மெளனி யானர் தமிழ் ஐயா. சிறுவயதிலேயே பாரதிக்குத் திருமணம் நடை பெற்றது. அதாவது ஆயிரத்து எண்ணுாற்றுத் தொண் ணுாற்று ஏழாம் ஆண்டு சூன் மாதம் பதினைந்தாம் தேதி. அப்போது பாரதிக்கு வயது பதினன்கு. கடையம் செல்லப்ப அய்யரின் மகள் செல்லம்மாள், பாரதியின் வாழ்க்கைத் துணைவியாளுள். அப்போது செல்லம்மாளுக்கு வயது ஏழு. பதின்ைகு வயது நிரம்பிய மணமகனும் ஏழுவயது நிரம்பிய மணமகளும் திருமண மூலம் இணைந்தனர். அந்தக் காலத்தில் திருமண விழா ஒரே நாளில் முற்றுப் பெருது. நான்கு நாட்கள் தொடர்ந்து நடை பெறும். அந்த முறை பற்றிப் பாரதி திருமணமும் நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. -

  • நாலாவது நாள். விழா முற்றுப் பெறும் நேரம் ஆசுகவி ஒன்று பாடினர் பாரதியார்; சிறப்பாகத் திருமண
  • செல்லம்மாள் பாரதி-பாரதியார் சரித்திரம்