பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பாரதியின் புரட்சி உள்ளமோ சிவனின் கட்டுப் காட்டை ஏற்க மறுத்தது; மீறியது. காசி வாழ்க்கை கசந்தது. சில நாட்கள் சென்றன. அங்கிருந்து புறப்பட்டார் பாரதி. எட்டயபுரம் சேர்ந்தார். எட்டயபுரம் ஜமீந்தார் அவருக்கு ஒரு வேலை அளித்தார். என்ன வேலை? நாள்தோறும் வரும் பத்திரிகைகளைப் படித்து ஜமீந்தாருக்குச் சொல்லவேண்டும். இதுதான் வேலை. மாதச் சம்பளம் ரூபாய் இருபது. இந்த வேலையை இரண்டு ஆண்டுகள் செய்தார் பாரதியார். அதாவது 1902 முதல் 1904 வரை. அந்த சமயத்திலே ஒருநாள். எட்டயபுரம் சோதிட வித்வான் குருகுஹதாசப்பிள்ளை வீட்டுத் திண்ணையிலே பலர் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அவருள் பாரதி யாரும் ஒருவர். அப்பொழுது வாங்கா சப்தம் கேட்டது. வாங்கா என்பது ஒர் ஊது வாத்தியம். அதை வாயில் வைத்துக் கொண்டு ஊதுவார்கள். அவ்வாறு எழுப்பும் சப்தம் நீண்ட தூரம் வரை கேட்கும். எட்டயபுரம் ஜமீந்தார் தெருவிலே வருகிறபோது இந்த வாத்தியத்தை ஊதிக்கொண்டு இருவர் முன்னே ஓடி வருவார்கள். சிறிது பின்னே ஜமீந்தார் வருவார். வாத்திய சப்தம் கேட்ட உடனே தெருவிலே உட்கார்ந்திருப்பவர் எல்லாரும் எழுந்து நிற்க வேண்டும். ஜமீந்தார் அந்த இடத்தைக் கடந்து செல்லும்வரை நின்றுகொண்டே இருக்கவேண்டும்.

  • இந்த வழக்கத்தைப் பின்பற்றி எல்லாரும் எழுந்து நின்றனர். பாரதியார் என்ன செய்தார்? Proclamation of
  • கூறியவர் -எட்டயபுரம் குருகுகதாசப்பிள்ளை