பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 Stupidity என்று சொல்லி வி ட் டு தி திண்ணையிலே உட்கார்ந்து விட்டார். அந்த வம்புச் சாவடியிலே இருந்தவர் ஒருவர் ஜமீந் தாரிடம் இந்தச் செய்தியைக் கூறி, வத்தி வைத்து விட்டார். அதனல் கோபம் கொண்ட ஜமீந்தார் பாரதியை வேலையினின்று நீக்கிவிட்டார். அன்று இரவு ஒரு தெருவிலே தீப்பற்றிக் கொண்டது. அப்போது அங்கே பாரதியும் சென்ருர். "என்ன சுப்பையா! மகாராஜா உன்னை வேலை யிலிருந்து நீக்கிவிட்டாராமே!" என்று கேட்டார் நண்பர் ஒருவர். "ஆம்! அன்று இலங்கையிலே ஒரு கவியைத் துன்புறுத் தின்ை இராவணன். இலங்கையில் தீ மூண்டது. இங்கே எனக்கு-ஒரு கவிக்கு-துன்பம் கொடுத்தார் இந்த மகாராஜா. இங்கேயும் தீ மூண்டது' என்ருர் பாரதி. கவி = கபி= குரங்கு. அப்போது பாரதிக்கு வயது இருபது. சபாரதியார் வேலை நீக்கப் பட்ட செய்தியறிந்தனர் நண்பர் சிலர். மீண்டும் அவரை அந்த வேலையில் அமர்த்த முயன்றனர். 'எட்டயபுரம் மகாராஜா கண்டைக்காய் அளவு பூமியை வைத்திருக்கிரு.ர். உலகம் பெரிது. அதிலே எனக்கு இடமிருக்கிறது என்று அவரிடம் சொல்' இவ்வாறு கூறினர் பாரதி. மீண்டும் ஜமீனில் வேலை செய்ய மறுத்துவிட்டார்.

  • கூறியவர்-குருகுகதாசப்பிள்ளை.

3