பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

  • அப்போது ஒரு நூல் இயற்றினர். அதன் பெயர் "மூடசிகாமணிகள் நட்சத்திரமாலை" என்பது. நட்சதி திரங்கள் இருபத்தி ஏழு. அதேபோல் இந்த நூலும் இருபத்தி ஏழு பாக்களால் ஆனது. அதிலே சிலரைக் குறிப்பிட்டு வசை பாடியிருந்தார் பாரதியார்.

அதைப் பலரிடம் படித்துக் காண்பித்தார். கந்தசாமிக் கவிராயர் போன்ருர் பலர் பாரதியைப் பாராட்டினர். ஆனல் ஒருவர் மட்டும் வேறு விதமான கருத்துத் தெரிவித் தார். "இந்த நூலில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் எல்லாம் உண்மை. ஆயினும் இதேைல உனது எதிர் காலம் பாதிக்கப்படும். எனவே இது வேண்டாம்" என்ருர் அவர். அவர் பெயர் மதுரை சங்கப்பா; அவர் வயது சென்றவர். பெரிய வேதாந்தி. சங்கப்பாவின் கருத்தை ஏற்றுக் கொண்டார் பாரதி. பாடல் எழுதி வைத்திருந்த காகிதத்தைக் கிழித்துப் போட்டார்.

  • கூறியவர்-எட்டயபுரம் குருகுகதாசப்பிள்ளை.