பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் எதிரொலி அந்த சமயத்திலே நாட்டிலே புதிய விழிப்புணர்ச்சி தோன்றி வளர்ந்துகொண்டு வந்தது. அது சமூகத்தின் மேல் மட்டத்திலேயே பரவியிருந்தது. இந்த விழிப் புணர்ச்சி எதல்ை ஏற்பட்டது? காங்கிரஸ் மகாசபையிஞ்ல் ஏற்பட்டது. சென்னையிலே இதற்குத் தூண்டுகோலாக விளங்கியவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். கதேசமித்திரன்' பத்திரிகையைத் தொடங்கி, அப்பத்திரிகை மூலம் இந்த உணர்ச்சியைப் பரப்பி வந்தார் ஐயர். ஆங்கிலத்தில் வரும் செய்திகளை உணர்ச்சியுடன் அழகான தமிழில்-எளிய தமிழ் நடையில்-வடித்துத் தரத்தக்கவர் ஒருவரை அவர் தேடிக் கொண்டிருந்தார். தற்செயலாக மதுரைக்கு வந்தார் அவர். அவர்தம் வரவு அறிந்தார் பாரதி. பாரதி சுப்பிரமணியம் பத்திரிகை சுப்பிரமணியத்தை நாடினர்; சென்ருர்: வென்முர். விளைவு என்ன? சுதேச மித்திரன்' பத்திரிகையில் உதவியாசிரியர் வேலை ஏற்ருர் பாரதி. 1904-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலே "கதேச மித்திரன் உதவியாசிரியர் ஆனர். அப்போது பாரதிக்கு வயது இருபத்தி இரண்டு. அந்தக் காலத்தில் 'சுதேசமித்திரன்’ எங்கிருந்து வெளி வந்தது? சென்னை ஜார்ஜ்டவுன் அரண்மனைக்காரத்