பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&# தெருவிலே ஒரு வீட்டிலிருந்து வெளி வந்தது. அரண்மனைக் காரத் தெருவிலே இப்போது அந்தோணியார் ஆலயம் இருக்கிறதே. அதற்கு எதிர்ப்புறத்தில் இருந்தது அந்த வீடு. சம்பளம் அதிகம் இல்லை. எனினும் உற்சாகமாகப் பேசி வேலை செய்ய வைத்துவிடுவார் ஐயர். மாலையிலே வேலை முடித்துவிட்டு மேல் மாடியிலே திறந்த வெளியிலே நின்று கொண்டிருப்பார் பாரதியார். அங்கிருந்து கடலைப் பார்த்துக் கொண்டிருப்பார். வேலைக்காரன் ஒருவன் வருவான்; ஒரு டம்ளர் காப்பியைக் கொடுப்பான்: "ஐயர் இதைக் கொடுக்கச் சொன்னர்" என்பான். அதை வாங்கி அருந்திக் கொண்டிருப்பார் பாரதி. ஐயரும் வருவார். "பாரதி! இதைப் படித்தாயா?" என்று சொல்லிக் கொண்டே ஒரு பத்திரிகையைக் கொடுப்பார். "ஓ! படித்தேனே!" என்பார் பாரதி. "அதை நமது பத்திரிகையிலே வெளியிட்டால் எவ்வளவு நன்ருயிருக்கும்" என்பார் ஐயர். "ஓ! வெளியிடலாமே!” என்பார் பாரதியார். 'அந்த சாமர்த்தியம் உன்னைத் தவிர வேறு எவருக்கு இருக்கிறது. நீ காளிதாசன். ஆனல் நான் போஜனுக இல்லையே!” என்பார் ஐயர். கொடுங்கள்' என்று வாங்கிக் கொள்வார் பாரதி. 'இப்பொழுது ஒன்றும் அவசரமில்லை. வீட்டுக்குக் கொண்டு போய், நன்முக நிதானமாக எழுதி, நாளை கொண்டு வந்தால் போதும்' என்று சொல்லிக் கொண்டே போய் விடுவார் ஐயர்.