பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&g தவறில்லை. நாட்டின் முன்னேற்றம் கருதி எல்லாரும் ஒருங்கே அமர்ந்து உண்ணலாம். இப்படிப் பேசுவார்கள். நீண்ட தீர்மானங்கள் நிறைவேற்றுவார்கள். அவ்வளவு தான். அதற்குமேல் ஒன்றும் செய்யமாட்டார்கள். இவர்களை ஏளனம் செய்தார் பாரதி; மேடைப் பிரசங்கம் செய்தாலோ, தீர்மானம் நிறைவேற்றி விட்டா லோ சீர்திருத்தம் வந்துவிடுமா? வேண்டுவது செயல்; செயல். இதுதான் பாரதியின் கருத்து. தமது கருத்தைச் செயலில் காட்ட விரும்பினர் பாரதி; சங்கம் ஒன்று தோற்றுவித்தார். அந்த சங்கத்தின் பெயர் ராடிகல் கிளப். வழக்கறிஞர் எஸ். துரைசாமி ஐயர், சர்க்கரைச் செட்டியார், ஜெயராம் நாயுடு ஆகியவர் பலர் அச்சங்கத் திலே ஆங்கம் வகித்தனர். மண்ணடி ராமசாமி தெருவிலே வக்கீல் துரைசாமி ஐயர் வீட்டிலே இருந்தது சங்கம். தீர்மானம் நிறைவேற்றுவது மட்டும் போதாது. பிராமணர் பிராமணரல்லாதார் எல்லாரும் சமமாக உட்கார்ந்து உண்பது மட்டும் போதாது. பிராமணரல்லா தார் சமையல் செய்ய வேண்டும்; பிராமணர் சாப்பிட வேண்டும். இப்படி ஏற்பாடு. சமையல் செய்தவர் ஜெயராம் நாயுடு, மற்றையோர் சமமாக அமர்ந்து உண்டனர். அந்தக் காலத்திலே பெரியதொரு சமூகப் புரட்சியை உண்டு பண்ணியது இச்சங்கம். ஆயிரத்துத் தொளாயிரத்து ஐந்தாம் ஆண்டு. நமது விடுதலைப் போரிலே முக்கியமானதோர் ஆண்டு இது, இந்த ஆண்டுதான் நமது விடுதலைப் போருக்கு வேகம் கொடுத்தது.