பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 "டம்பப் பேச்சுக்காரர்களின் தொகை குறைந்து தேசாபிவிருத்தியில் ஆத்திரமுள்ள வர்த்தகர், ஜமீந்தார் கள் என்றபேர் காங்கிரஸ் கூட்டத்தில் சேர்தற்குரிய முயற்சிகள் செய்யப்பட வேண்டும். இவையன்றி நமக்கு வேறு பல விருப்பங்களும் உள்ளவெனினும் இவையே முக்கியமானவை." (இந்தியா- 7 - 7. 1906) இவ்வாறு பாரதியார் காங்கிரஸ் மகாசபைக்கு யோசனை கூறினர். 1906ம் ஆண்டு சூலைமாதம் 14ந் தேதி இந்தியா' பத்திரிகையில் இக்கருத்துக்களை மேலும் வற்புறுத்தினர் பாரதியார். 'காங்கிரஸ் விஷயத்திலே நாம் சென்ற வாரம் ஒர் குறிப்பு எழுத நேரிட்டது. அதற்கப்பால் நமது கருத்தைப் பெரும்பாலும் தழுவியே அரிய தேச பக்த ராகிய ரீகாபர்தே ஹிந்து பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிருேம். இந்தி யாவின் நலத்தை விரும்பும் எல்லோருக்கும் காங்கிரஸ் முறைமைகளில் பல சீர்திருத்தங்கள் செய்ய வேண்டு மென்ற எண்ணம் ஒருங்கே தோன்றுகிறது. ரீமான் காபர்தேயின் பிரரேபணைகள் காங்கிரஸ் தலைவர்களால் நன்கு கவனிக்கப் படுமென நம்புகிருேம். காங்கிரஸ் தீர்மானங்கள் சம்பந்தமாக முக்கியமான சீர்திருத்தம் நடக்க வேண்டும். கேட்போர் காது புளித்துப் போகும் படியாக, அந்நியர்கள் ஒருநாளும் செய்து கொடுக்கப் போகாத விஷயங்களை, அவர்கள் செய்து கொடுக்க வேண்டுமென்று கெஞ்சிக் கொண்டே இருப்பதற்கு அபரிமிதமான பணச் செலவு ஏன் செய்ய வேண்டும்? பிரம்மாண்டமான பொதுச்சபைகள் கூடியும், விண்ணப் பங்கள் அனுப்பியும், பிரார்த்தனைகள் புரி ந் தும்,