பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 மன்ருடியும், எத்தனையோ மாதங்களாக பெங்காளத் துண்டிப்பு விஷயத்தில் பெங்காளத்தில் செய்து வந்த பிரயத்தனங்கள் விழலுக்கிறைத்த நீராய் போய்விட்டன அல்லவா? பிரிட்டிஷார் நமது உண்மையான குறைகளை அறியாமலிருப்பதனலேதான் அ வ ற் ைற நிவாரணம் செய்யாமலிருக்கிருர்கள் என்றும், நமது குறைகள் இன்ன என்று தெளிவாக எடுத்துக் காட்டி விடுவோமானல் உடனே அவற்றை நீக்கி விடுவார்கள் என்றும் நமது ஜனத் தலைவர்கள் நம்பினர்கள். அந்த சமயத்தில் காங்கிரஸ் முறைகள் ஒரு மாதிரியாக ஏற்பட்டன. இப்போது அந்த எண்ணம் மாறிவிட்டது. பிரிட்டிஷா ரிடம் எத்தனை முறை எடுத்துச் சொன்னலும் அவர்கள் தமது செளகரியங்களுக்குச் சிறிது பிரதிகூலமாயிருக்கும் சீர்திருத்தங்களை ஒருநாளும் செய்யப் போவதில்லை. இவ்வாறு நாம் அறிந்து கொண்டதற்கப்பால் நமது காங்கிரஸ் முறைகளை மாற்ற வேண்டும் என்பது நமது கடமையாகின்றதல்லவா?...... இந்த வருஷத்துக் காங்கிரஸ் நடக்கும் முன்பாகவே நமது தலைவர்கள் இவ்விஷயத்தில் சரியானபடி நிச்சயம் செய்து கொள்ள வேண்டும்.” 1906 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்கத்தாவிலே நடைபெற இருந்தது காங்கிரஸ் மகாநாடு. அம்மகா நாட்டின் போக்கை உருவாக்கினர் பாரதியார் என்ருல் அது மிகையாகாது. காங்கிரஸின் போக்கை உருவாக்கும் வகையிலேதான் மேற்குறித்தவாறு எழுதினர் பாரதியார். கல்கத்தா காங்சிரசுக்குத் தலைவர் யார்? வங்காளத் திலே புதிய கட்சியின் தலைவராக விளங்கிய விபினசந்திர பாலர், திலகரே தலைவராக வர வேண்டும் என்று விரும் பினர்; விரும்பியதோடு மட்டு மன்றி ஊர் ஊராகச் சென்றும் பேசினர். ஆனல் கல்கத்தா காங்கிரசின்