பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 பத்திரிகையில் 1906 டிசம்பர்.22ந்தேதி பின்வரும் செய்தி வெளியிடப்பட்டது: 'காங்கிரஸ் இனிது நடைபெறும் பொருட்டு எல்லா வகுப்பைச் சேர்ந்த ஜனத் தலைவர்களும் அரிய முயற்சிகள் செய்து வருகிருர்கள். இந்த சமயத்தில் நமது புதிய கட்சித் தலைவர்கள் சும்மா இருக்கவில்லை. காங்கிரஸ் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாகவே இந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஏழு பேர் ஒருங்கு சேர்ந்து ஒரு மீட்டிங் கூடி காங்கிரசில் இப்போது நடக்க வேண்டிய முக்கிய திருத்தங்களைப் பற்றித் தமக்கு நியாயமாகப் புலப் படும் ஆலோசனைகள் செய்ய நிச்சயித்துள்ளார்கள், சென்னையில் புதிய கட்சிக்கு ஒரே பிரதிநிதியாய் இருக்கும் நமது தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியர் மேற்படி சபைக்கு அவசியம் வந்து சேரவேண்டும் என்று ரீ விபின சந்திரபாலரும், பூர் திலகரின் உயிர்த் துணையாகிய பூர் காபர்தேயும் வற்புறுத்திக் கடிதம் எழுதியபடியால், இப்பத்திராதிபர் அங்கு செல்கின்ருர். மேற்கண்ட செய்தியிலிருந்து நமக்கு என்ன தெரி கிறது? வங்கத்தில் புதிய கட்சித்தலைவராக விளங்கிய விபின சந்திரபாலர் பாரதிக்கு அக்கட்சியில் எவ்வளவு முக்கிய இடம் அளித்திருந்தார் என்பது தெரிகிறது. திலகர் பெருமானின் உயிர்த்துணைவராகிய காபர்தேயின் அழைப்பு எதைக் குறிக்கிறது? திலகர், பாரதியை எவ்வளவு முக்கியமானவராகக் கருதினர் என்பதையே குறிக்கிறது. "பாலபாரதம் என்ற பெயரில் சங்கம் ஒன்று ஏற்படுத்தி யிருந்தார் பாரதியார். இச்சங்கத்தின் மூலம் புதிய கட்சிக் கொள்கைகளைப் பரப்பி வந்தார். இந்த சபை யானது இந்தியா ஆபீசில் கூடியது. கல்கத்தா