பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔叠 வரவழைத்தது சென்னையிலுள்ள சில புதுக் கட்சியார்களே யன்றி பழைய ககதியார்களல்ல. பரம யோக்கியர்கள், இந்தியர்களுக்கும் இந்திய காங்கிரஸ் சபைக்கும் தீமை செய்து அவமதிப்பவராய் இருந்த "மெயில்' பத்திராதிபரா யிருந்த ஒரு பரங்கிப் பிள்ளைக்கு மாப்பிள்ளை விருந்து செய்து உபசரிப்பார்களேயன்றி, ரீ விபின'சந்திர பாலர் போன்ற சாமான்ய மனிதருக்கு உபசாரம் செய்ய முன்வர மாட்டார்கள். ஏனென்ருல் ரீ பாலரால் இந்தியாவுக்கு விளைந்த நன்மைகளிலும், காலஞ் சென்ற H. K. பீச்சாம் என்னும் பரங்கிப் பிரபுவால் அதிக நன்மை விளைந்திருப்ப தாய் இந்த மகாத்மாக்களின் திருவுளத்திலே பதிந்திருக் கிறது. ஆகா! என்ன செய்யலாம். நமக்கு யாதொரு சம்பந்தமற்றவரும், நமக்கு நேர் விரோதியாய் இருந்தவரு மாகியவருக்கு சம்பந்தி உபசாரம் செய்துவிட்டு, இந்தியாவில் பிறந்து வளர்ந்த இந்துவும் இந்தியாவின் பொருட்டு இந்தியாவிலுழைத்துக்கொண்டு வரும் தேசாபி மானியுமாகிய பூரீ விபினரை உபசரணை செய்வதற்குப் பின் வாங்குவார்களேயானுல் இப்படிப் பட்டவர்கள் இந்தியர்கள் தானு? இவர்களிடமும் தேசாபிமானம் என்பது மருந்துக்காகிலும் கிடைக்குமா என்பதைப்பற்றி அறிஞர்கள் அறிந்து கொள்ளலாம். இவர்கள் ஜனத் தலைவர்கள்தான? இவர்களை ஜனங்கள் மதிக்கலாமா? என்பதை பொது ஜனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். மனதிலே நல்லெண்ணம் இருக்கிறதா? இல்லையா என்பது வெளிநடையில் திட்டமாய் விளங்கிவிடும்.' சென்னையிலே யிருந்த பிரமுகர்கள் விபின சந்திர பாலருக்கு உபசாரம் செய்ய முன் வரவில்லை. ஏன், விபின சந்திரர் பேசிய கூட்டங்களில் தலைமை வகிக்கக்கூட எவரும் முன் வரவில்லை. இப்படியாக இவர்கள் விபின சந்திரரை பகிஷ்கரித்தார்கள். பயம்! பயம்!