பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 மயிலாப்பூர் பிரமுகர்களின் இந்த நடவடிக்கையால் சிற்றங் கொண்டார் பாரதியா?. மெயில் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த பீச்சாம் என்ற வெள்ளையருக்கு விருந்துபசாரம் செய்தார்கள் சென்னைப் பிரமுகர்கள்: பாராட்டுரைகள் வழங்கினர்கள். ஆனல் விபின சந்திர பாலருக்கு ஏதும் செய்யவில்லை. அதனல் சீற்றங்கொண்ட பாரதியார் மேலே குறிப்பிட்டவாறு இந்தியா’ பத்திரி கையில் எழுதினர். விபின சந்திர பாலர் சென்னையில் நிகழ்த்திய சொற் பொழிவுகள் பற்றி பாரதியார் தமது இந்தியா’ பத்திரி கையிலே ஒரு கட்டுரை வெளியிட்டார். மேற்படி கட்டுரை 1907-ம் ஆண்டு மே மாதம் 11ந் தேதியிட்ட "இந்தியா' பத்திரிகையிலே வெளிவந்தது. அதன் சில பகுதிகள் வருமாறு : "......இவரது வாக்குத் திறமையும், விவகார நுட்பமும், தேச பக்திப் பெருமையும் அளவிட்டுக் கூற முடி யாதன. பதியிைரக் கணக்கான ஜனங்கள் திருவல்லிக் கேணி சமுத்திரக்கரை மண்ணிலே சென்ற சில தினங் களாக இவரது அற்புத உபந்நியாசங்களைக் கேட்டுப் பரவச மடைந்து விட்டார்கள். இவர்மீது விரோதத்துடன் சென்றவர்கள்கூட, இவரது உபந்நியாசங்களைக் கேட்ட வுடனே இவருக்கு அடிமைகளாய் விட்டார்கள். புதிய கட்சி என்ருல் ஏதோ வாலிபர் செய்யும் குறும்பென்று நினைத்துவந்த சில சென்னை மேதாவிகள்கூட, இவரது உபந்நியாசங்களைக் கேட்டவுடன், புதிய கட்சியார் சொல்லும் முறைகளைத் தவிர நமது பாரத தேசம் உன்னதம் பெறுவதற்கு வேறு வழிகளே கிடையாதென்று தெரிந்து கொண்டு விட்டார்கள். புதிய கட்சியாரிடம் வெறுப்புக் காட்டி வந்த ஹிந்து ஸ்டாண்டர்ட்” "இந்தியன் பேட்ரியட்' என்ற பத்திரிகைகள் இப்போது