பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 விபின சந்திர பாலரைம்பற்றிப் பக்கம் பக்கமாக ஸ்தோத் திரங்கள் எழுதத் தலைப்பட்டு விட்டன. 'ஹிந்து' பத்திரிகை விபின பாபுவின் விவகாரங்களையும், கொள்கை களையும் தழுவிப் பேசத் தொடங்கி விட்டது. புதிய கட்சிக்கும் பழைய கட்சிக்கும் இடையிலே அங்கு பாதி இங்கு பாதியாக நின்ற கதேசமித்திரன்' பத்திரிகை இப் போது முற்றிலும் நமது பட்டணத்தைச் சார்ந்து விட்டது. சென்னையிலே எங்கு பார்த்தாலும் விபின சந்திர பாபுவைப் பற்றியே பேசுகிரு.ர்கள். எங்கே கேட்டாலும் அவருடைய புகழ்ச்சிதான். தெருக்களிலே வந்தே மாதரம் வெகு சாமானியமான வசனமாகி விட்டது. "சென்ற காங்கிரஸ் கல்கத்தாவிலே கூடிய காலத்தில் சில மயிலாப்பூர் வக்கீல்கள் கல்கத்தாவிற்குப் போய் சென்னை மாகாண முழுவதும் பழைய கட்சிக்கு அநுகூல மாகவேயிருக்கும்படி தாம் நிபந்தனை செய்திருப்பதாக டம்ப நடிப்பு நடித்துவிட்டு வந்தார்கள். விபின பாபுவை அப்போது இங்கே வரும்படியாகக் கேட்டுக் கொண்ட நாம், அவர் இங்கே வரும் பகடித்தில் மயிலாப்பூர் வக்கீல்கள் செய்து கொண்ட டம்பம் வெறும் பொய் என்பதை நேரிலே கண்டு கொள்வார் என்று நமது பத்திரி கையிலே தெரிவித்திருந்தோம். இப்போது நாம் சொல்லியது முற்றிலும் வாஸ்தவமாக முடிந்து விட்டது. மயிலாப்பூர் வக்கீல்கள் வெளியே தலையை நீட்டவில்லை. வீடுகளுக்குள்ளே பதுங்கியிருப்பவர்களும் வெளியூர்களுக்கு ஒடுபவர்களுமாக இருக்கிரு.ர்கள். இந்தப் புலிகள் கல்கத்தாவிலே செய்து கொண்ட டம்பத்தைப் பார்த்தால் சென்னை மாகாண முழுதும் இவர்கள் உள்ளங்கைக்குள்ளே அடங்கியிருக்கிற தென்று மற்ற மாகாணத்தார் நினைக்கும் படியாக இருந்தது. ஆனல் இப்பொழுதோ இவர்கள் இருக்குமிடத்தையே காணவில்லை."