பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியும் வ. உ. சியும் துTத்துக்குடியிலே வக்கீல் தொழில் புரிந்து வந்தார் பூரீ. வ. உ. சிதம்பரம் பிள்ளை. சென்னையிலே பத்திரிகை நடத்தி வந்தார் பாரதி. இவ்விருவரும் எப்படி நண்ப prrru$6uttf? இக் கேள்விக்கு விடை எங்கே காணலாம்? வ. உ. சி. கண்ட பாரதி' என்ற புத்தகத்திலே காணலாம். இந்தப் புத்தகத்திலே பூரீ. வ. உ. சிதம்பரம்பிள்ளை என்ன சொல் கிருர்? "இப் பெரியாரை நான் முதன் முதலாகப் பார்க்கும் பாக்கியம் பெற்றது அவர் சென்னையில் இந்தியா' என்னும் பெயர் பெற்ற தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த காலத்தில்தான். அது 1906-ம் வருஷ ஆரம்பமாக இருக் கலாம் என்று நினைக்கிறேன். அப்போது நான் துரத்துக் குடியிலிருந்து சென்னை சென்றிருந்தேன். எனது: சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்திலிருந்த கச்சேரிகள் எல்லாம் எடுபட்டு விட்டதல்ை, அப்பொழுது நான் தூத்துக்குடியில் வக்கீல் தொழில் புரிந்து வந்தேன். சென்னையில் திருவல்லிக்கேணியில் நண்பன் ஒருவன் வீட்டில் தங்கியிருந்தேன். அங்கிருந்து நான் பட்டணம் போகிற வருகிற வழியில் ஒரு பெரிய வீடு இருந்தது. அது