பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 பாரதியார் ஆரம்பித்தார்: "உங்கள் தகப்பனர், என் தகப்பனரின் அத்யந்த நண்பர். அவாளை எனக்கு நன்ருகத் தெரியும். உங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன்." பின்னர் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். தேச காரியங்கள் பற்றிய பேச்சுக்களே எங்கள் அளவளாவுதலில் தலைமை வகித்தன. பின்னர் நாள் தோறும் நான் இந்தியா ஆபீசுக்கும், அதிபர் வீட்டுக்கும் செல்லலானேன். சுப்பிரமணிய பாரதியும் நானும் மாமனும் மருகனும் ஆைேம். ஒரு நாள் மாலை நாங்கள் கடற்கரையில் வார்த்தை யாடிக் கொண்டிருந்தோம். எங்கெங்கோ சென்று கொண்டிருந்த எங்கள் பேச்சு வங்க வள நாட்டின் மீது திரும்பியது. அப்போது காளிதேவிக்கு வங்கத்தில் ஆடு பலி கொடுப்பதைக் கண்டித்து விபின சந்திர பாலர் பேசிய பேச்சுக்கு உருக்கத்துடனும் ஆவேசத்துடனும் ஒரு வியாக்கி யானம் செய்து முடித்தார் மாமா. (இல்லை; இல்லை, பொழிந்து .ெ கா ட் டி ன ர் என்று சொல்வதுதான் பொருந்தும்.) இவ் வியாக்கியானத்தைக் கேட்டு நான் கொழுத்த தேச பக்தனகி விட்டேன். அதாவது இந்தக் காலத்தில் தீவிரவாதி. இந்த வியாக்கியானத்தில்ை நாங்கள் இருவரும் அதிகமாகப் பிணைக்கப்பட்டோம்; பெரு மகிழ்ச்சி கொண் டோம். எங்கள் நட்பைப் பற்றி மாமா சொல்வார். 'மாப்பிள்ளை நமக்கினி யாராடா ஈடு?" என்று.